ஐபிஎல் தொடரில் சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் இன்னும் இடம் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் சந்தீப் சர்மா இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தி வருகிறார். கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்த நிலையில் உலகக் கோப்பையோடு டி20 ஃபார்மெட்டில் ஓய்வை அறிவித்தார்.
அவருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாறுவார் என்று எதிர்பார்த்த வேளையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து வரும் சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக மாறினார். இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் பதவிக்கும், ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது என்று ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாருங்கள், தனது ஐபிஎல் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றால் அவர் இந்திய டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக மாறலாம் என்கிற விவாதம் முற்றிலும் அர்த்தமற்றதாகும். ஐபிஎல் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றால் இந்திய டி20 அணியின் கேப்டனாக மாறலாம் என்ற அளவுகோல் அத்தமற்றது. தற்போதைய கேப்டன் சூரியகுமார் யாதவ் எந்த ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக இல்லை.
இதையும் படிங்க:நான் வெட்கப்பட எதுவுமே இல்லை.. ஓபனா சொல்றேன்.. தோனி மட்டும் இல்லன்னா இது நிச்சயமா நடக்காது – சிஎஸ்கே கேப்டன் பேட்டி
எனவே இந்திய கேப்டனாக இருப்பதற்கான அளவுகோல் அதுவல்ல. மேலும் ரோகித் சர்மா கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஐபிஎல் அணிக்கும் கேப்டன் கிடையாது. ஆனால் அவர்தான் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன். ஆனால் அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்தார். எனவே ஐபிஎல் தொடரில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கான அளவுகோல் கிடையாது. ஐபிஎல் என்பது முற்றிலும் வேறுபட்ட தொடராகும் அது ஒரு உள்நாட்டு கிரிக்கெட் லீக் தொடர் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






