சில நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என இங்கிலாந்து கைப்பற்றியது. இதற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை தற்போது வெளியிட்டிருக்கிறது.
இந்த தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அரை சதம் மற்றும் அதிரடி சதம் அடித்த இளம் வீரர் ஹாரி புரூக் 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்திருக்கிறார். அவரது குறுகிய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சிறந்த தரநிலை வரிசையாக இது இருக்கிறது.
மேலும் இந்தப் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், பாபர் அசாம், டேரில் மிட்சல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இருந்து வருகிறார்கள். முதல் ஆறு இடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாதபோதும் கூட, அடுத்த நான்கு இடங்களில் மூன்று பேர் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தங்கி தற்பொழுது 751 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் 740 புள்ளிகள் எடுத்து எட்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடாமல் தவறவிட்டார். இருந்தாலும் அவர் 737 புள்ளிகள் எடுத்து பத்தாவது இடத்தில் தொடர்கிறார்.
தற்போது இந்திய அணியின் எதிர்கால வீரராக இந்திய அணி நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வரும் இளம் வீரர் சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி இருபதாவது இடத்தில் இருக்கிறார். இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் புஜாரா 38 வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 39வது இடத்திலும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : கம்பீர் அகர்கர்.. பயப்படாம ஹர்திக்கை தூக்கின காரணத்தை சொல்லுங்க.. உண்மை எனக்கு தெரியும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் :
கேன் வில்லியம்சன் – 859
ஜோ ரூட் – 771
ஹாரி புரூக் – 768
பாபர் அசாம் – 768
டேரில் மிட்சல் – 757
ஸ்டீவ் ஸ்மித் – 751
ரோகித் சர்மா – 751
யாசஷ்வி ஜெய்ஸ்வால் – 740
திமுத் கருணரத்தினே – 739
விராட் கோலி – 737