ஜெயஸ்வால் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டு ஆச்சரியமாயிட்டேன்.. அவர் வெற்றிக்கு காரணம் இதுதான் – ஜெயசூர்யா பேச்சு

0
1095
Jaiswal

2024 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம் பிடித்திருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றதால் அவர் டி20 அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரர் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய பேட்டிங் வெற்றிக்கு காரணம் குறித்து இலங்கை லெஜெண்ட் சனத் ஜெயசூரியா பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதுவரையில் ஜெய்ஸ்வாலை டி20 கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இந்த இரண்டு வடிவத்தில் மட்டும் வாய்ப்பு கொடுத்தாலும் அவர் இரண்டிலுமே அசாதாரண செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சதம் அடித்திருக்கும் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த சதங்கள் எல்லாமே பெரிய சதங்களாக அமைந்திருக்கின்றன. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு இரட்டை சதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை லெஜெண்ட் ஜெயசூர்யா ஜெய்ஸ்வால் பேட்டிங் வெற்றி குறித்து பேசியிருக்கிறார். ஐபிஎல் ராஜஸ்தான் ராயல் அணியின் செயல் திறன் இயக்குனர் ஜூபின் பருச்சாவை வைத்து இலங்கை அணி கடந்த ஒரு வாரம் பயிற்சி பெற்றது. இந்த பயிற்சி காலத்தில் அவரிடமிருந்து ஜெயஸ்வால் குறித்து தான் ஆச்சரியமான விஷயங்கள் கேட்டதாக ஜெயசூர்யா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சனத் ஜெயசூரியா கூறும் பொழுது “இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் ஒரு திறமைசாலியாக இருக்கிறார். அவருக்கு நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்கின்ற விருப்பமும் ஆர்வமும் இருக்கிறது. இதை செய்வதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவர் நிறைய தியாகங்களை செய்து உழைக்கும் அர்ப்பணிப்பு உள்ள குழந்தையாக இருக்கிறார். அதனால்தான் அவர் சிறப்பாக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 223 ஸ்ட்ரைக் ரேட்.. மேக்ஸ்வெல் சாதனையை உடைத்த சூரியகுமார்.. கேப்டனான முதல் போட்டியிலேயே அமர்க்களம்

நாங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜுபின் பருச்சாவை வைத்து பயிற்சி மேற்கொண்டோம். அப்பொழுது ஜெய்ஸ்வால் மேற்கொள்ளும் பயிற்சி முறைகளை கேட்ட பொழுது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஜூபின் பருச்சா ஜெய்ஸ்வாலுக்கு எவ்வளவு கடினமான பயிற்சிகளை வழங்குகிறார் என்பது குறித்து கூறிய பொழுது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.