ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு போனார் சாம்கரன்; பல அணிகள் கடும் போட்டி!

0
3490
IPL

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சின் நகரில் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்தில் தங்களுக்கு அமையாத அணிக்கலவையை சரி செய்ய இந்த மினி ஏலத்தையே பெரிதும் நம்பி இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் ஏலத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏலத்தில் மூன்று இங்கிலாந்து வீரர்களே மிக முக்கியமானவர்களாக கருதப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சாம் கரன்!

இவர் ஏலத்துக்கு வந்த பொழுது இருந்தே அதிகப்படியான எதிர்பார்ப்பு மற்றும் போட்டி இருந்தது. முதலில் களத்தில் குதித்த மும்பை வேகமாக ஆரம்பித்து வைத்தது.

அடுத்து பெங்களூர் அணி ராஜஸ்தான் அணி உள்ளே வந்து சிறிது நேரம் போக்கு காட்டி கொண்டு இருந்தார்கள். ஆனால் இவர்களிடம் பெரிய அளவில் பணம் இல்லாததால் நிற்க முடியவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து பஞ்சாப் அணியும் சென்னை அணியும் பெரிய அளவில் போட்டியில் ஈடுபட்டு சாம் கரனை 10 கோடி தாண்டி கொண்டு சென்றார்கள்.
ஒரு கட்டத்தில் சென்னை அணி முடியாமல் விலகிக் கொண்டது.

இதை அடுத்து பஞ்சாப் அணி வாங்குவதற்கு பெரிய சூழல் காணப்பட்ட பொழுது மீண்டும் மும்பை அணி களத்தில் குதித்தது. இதனால் சாம் கரன் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையான 16.25 கோடியை தாண்டினார்.

மும்பை எந்த அளவில் போட்டியிட்டாலும் அதை தாண்டி செல்ல பஞ்சாப் தயாராக இருந்தது. இறுதியாக பஞ்சாப் அணி சாம் கரனை 18.50 கோடிகள் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் ஏலத்தில் பெற்ற அதிக தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது!