களத்தில் பும்ராவுடன் சண்டை.. என்ன நடந்தது உண்மையில் யார் மீது தவறு? – கான்ஸ்டாஸ் விளக்கம்

0
730
Konstas

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுடன் களத்தில் ஏற்பட்ட மோதலுக்கு யார் மீது தவறு என தற்போது சாம் கான்ஸ்டாஸ் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு 19 வயதில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் தன்னுடைய அதிரடியான பேட்டிங் மூலம் மட்டும் இல்லாமல் அதிரடியான நடவடிக்கைகள் மூலமாகவும் களத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இந்த நிலையில் கொண்டு பும்ராவை எதிர்கொண்டு அவர் விளையாடிய விதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

- Advertisement -

ஐந்தாவது டெஸ்ட் மோதல்

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் நேரத்தை ஒட்டி கூடுதல் ஓவரை சந்திப்பதை தவிர்ப்பதற்காக உஸ்மான் கவாஜா தாமதம் செய்து கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் பந்துவீச்சில் இருந்த பும்ரா சீக்கிரம் தயாராகும்படி அவரிடம் கூறினார்.

இதற்கு உஸ்மான் கவாஜா எதுவும் பேசவில்லை. ஆனால் எதிர்முனையில் இருந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வாய்த்தகராறுக்கு சென்றார். திடீரென களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பும்ராவும் ஆச்சரியமாக திருப்பி பதிலடி கொடுத்தார். நடுவர் தலையிட்டு திருப்பி அனுப்பினார். இப்படியான நிலையில் மேற்கொண்டு அன்றைய நாளின் கடைசி பந்தில் பும்ரா உஸ்மான் கவாஜாவை வெளியேற்றி கூடுதல் பதிலடியை சாம் கான்ஸ்டாஸ்க்கு கொடுத்தார்.

- Advertisement -

கான்ஸ்டாஸ் கொடுத்துள்ள விளக்கம்

இதுகுறித்து பார்ம் கான்ஸ்டாஸ் கூறும்பொழுது “ஐந்தாவது டெஸ்ட் போட்டி புற்றுநோய்க்கான ஒரு சிறப்பு விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக பிங்க் நிற உடையில் விளையாடப்பட்டது. எங்கள் குடும்பத்தில் என் உறவினர் ஒருவரும் என் தாத்தாவும் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தார்கள். தொடர்ந்து இதற்கான விழிப்புணர்வை பரப்பி இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் போராடுவோம்”

இதையும் படிங்க : கில் நல்ல பேட்ஸ்மேனே கிடையாது.. தமிழ்நாட்டு பையனுக்கு அந்த வாய்ப்ப கொடுக்கணும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“அன்றைய நாள் முடிவில் கூடுதல் ஓவரை சந்திக்கக் கூடாது என கவாஜா கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தப் பிரச்சனை களத்தில் உருவானது. உடனடியாக பும்ரா அவரை வெளியேற்றினார். அவருடைய அற்புதமான பந்துவீச்சு காண பெருமை அவருக்கே சேரும். மேலும் அந்தப் பிரச்சனையில் தவறு என் மீதுதான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -