பாகிஸ்தானில் இருந்து சொல்றேன்.. ஐபிஎல்தான் பெஸ்ட்.. பிஎஸ்எல் பின்னாடிதான் – சாம் பில்லிங்ஸ் பேச்சு

0
784
Billings

தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் டி20 லீக்கில் லாகூர் க்லாண்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாம் பில்லிங்ஸ் பிஎஸ்எல் தொடரை விட ஐபிஎல் தான் சிறந்தது என பாகிஸ்தானிலேயே சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

பாகிஸ்தானில் இந்த வருடம் ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற்ற காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் தொடர் ஐபிஎல் தொடர் நடந்து வரும் தற்சமயத்தில் நடக்கிறது. மேலும் பாகிஸ்தானில் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பிஎஸ்எல் லீக்கில் பரிசு பொருட்கள் மதிப்பு மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஒரு போட்டிக்கு 108 கோடி

தற்போது தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் ஒரு ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கு மட்டும் ஒளிபரப்பு உரிமைமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 108 கோடி ரூபாய் கிடைக்கிறது. உலக அளவில் ஒளிபரப்பு உரிமத்தில் இது இரண்டாவது அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் உச்சபட்ச வியாபாரத்தில் இருக்கிறது. எனவே ஐபிஎல் தொடருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் வரக்கூடிய எந்த லீக் ஆக இருந்தாலும், அதற்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் கூட ஐபிஎல் தொடருடன் போட்டியிடுவதற்கு இரண்டாவது இடத்தில் சரியான ஒரு தொடர் இல்லை என்பதுதான் வெளிப்படையான விஷயம்.

- Advertisement -

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேள்வி

இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சாம் பில்லிங்ஸ் இடம் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர் இரண்டையும் ஒப்பீடு வைத்து, எது சிறந்த தொடர் என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பாகிஸ்தானில் இருந்து கொண்டே சாம் பில்லிங்ஸ் மிகவும் நேர்மையான முறையில் பதில் அளித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : மேக்ஸ்வெல் மோசம் இல்லை ரொம்ப மோசம்.. இந்த நம்பரை மட்டும் நீங்களே பாருங்க – சைமன் டால் விமர்சனம்

இது குறித்து சாம் பில்லிங்ஸ் பதிலளிக்கும் பொழுது “இதற்கு நான் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக பதில் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? நிச்சயமாக தற்போது ஐபிஎல் தொடர்தான் மிகவும் சிறந்தது. எங்கள் நாட்டில் நடைபெறும் நீக்குகளில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் லீக்குகள் வரை ஐபிஎல் தொடருக்கு அடுத்து இரண்டாவது தொடராக இருப்பதற்குதான் போட்டியிடுகின்றன. ஐபிஎல் தொடருடன் போட்டியிட எந்த தொடரும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -