வெறும் 6 நிமிஷம்.. அமெரிக்காவை விட சிறப்பா பாகிஸ்தான்ல சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் – சல்மான் பட் பேச்சு

0
2238

பாகிஸ்தானில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முக்கிய ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையை விட இது மிகப்பெரிய வெற்றிகரமான நிகழ்வாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நகரங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கிரிக்கெட்டை உலக மக்களிடையே பிரபலப்படுத்துவதன் நோக்கமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டது. ஆனால் அது விளையாடும் அணிகளுக்கு சௌகரியமாக அமையவில்லை.

- Advertisement -

குறிப்பாக இலங்கை அணி ஒரு போட்டி முடிந்தவுடன் அடுத்த போட்டி நடைபெறும் மைதானத்திற்கு செல்ல நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா கூறியிருந்தார். அதேபோல மற்ற அணிகளுக்கும் பயண நேரங்கள் மற்றும் உணவு, ஜிம் வசதி உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்திய அணிக்கும் லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், அடுத்த சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்றதால் இந்திய அணி அசவுகரியத்தை சந்தித்தாலும் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பையையும் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரரான சல்மான் பட் அமெரிக்காவை விட பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகரமான தொடராக இருக்கும் என்று கூறுகிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்த நிகழ்வை அமெரிக்காவுடனோ அல்லது வேறு எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாது. நிச்சயமாக இந்த தொடர் பாகிஸ்தானில் வெற்றிகரமான தொடராக நடத்தப்படும். அமெரிக்காவின் ஆடுகளங்கள் சிறப்பானதாக அமையவில்லை. மேலும் மைதானங்களும் வெகு தொலைவில் இருந்தன. மற்றும் ஹோட்டல்கள் வேறு ஏதோ நகரத்தில் இருந்தது. அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கு அவர்களின் நகரங்களில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.

இதையும் படிங்க:அகர்கர் சும்மா சாக்குபோக்கு சொல்லாதிங்க.. ஹர்திக் விஷயத்தில் இதான் நடந்தது – பாக் ரஷித் லத்தீப் பேட்டி

அங்கு தங்கியுள்ள வெளிநாட்டு மக்களுக்கு மட்டுமே கிரிக்கெட் பற்றி தெரியும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இதுபோன்ற தொடர்கள் வரும்போது வீரர்கள் பெறுகிற அன்பும் மரியாதையும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். மேலும் அணிகளும் மணிக்கணக்கில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் சரியாக சீரமைக்கப்பட்டு ஆறு நிமிடங்களுக்குள் மைதானத்தை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். இது ஒரு ஜனாதிபதி பாதுகாப்பு போன்றது, அமெரிக்காவில் இது போன்ற உணர்வை உணர முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -