சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதில் அணி தேர்வு மட்டும் இல்லாமல் டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் கொண்டுவரப்பட்டார். இது அப்பொழுது பெரிய சர்ச்சையாக மாறாவிட்டாலும் தற்பொழுது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பேசியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களாக இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் கடந்த மாதத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அவரை இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவித்திருந்தார்கள். தொடர்ந்து அவர் இந்திய அணியின் கேப்டனுக்கான திட்டத்தில் இருந்து வந்தார்.
இப்படியான நிலையில் திடீரென டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டார். அத்தோடு கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா அதிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அவரை கேப்டன் பொறுப்புக்கு முன்னேறுவதில் இருந்து நகர்த்திவிட்டார்கள்.
இதுகுறித்து இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும் பொழுது ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் அடைவதும் அவரது பணிச்சுமையை நிர்வகிப்பதும் முக்கியம் என்பதால் அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்பதாக விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அவரது விளக்கத்தை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் ஏற்கவில்லை.
இதுகுறித்து ரஷீத் லத்தீப் கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இல்லை என சர்டிபிகேட் கொடுக்கிறார்கள். சூப்பர் ஃபிட்டாக இல்லாத வீரர்கள் எத்தனையோ பேர் கேப்டன்களாக வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.இந்த காரணம் ஒரு சாக்குப் போக்கானது. ஒருவேளை இந்திய அணியில் சூரியகுமார் ஆகவில்லை என்றால் கூட ரிஷப் பண்ட்டை கேப்டன் ஆக்கி இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியது இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : 163 ரன்.. பிளேசிஸ் கான்வே அதிரடி.. ப்ளே ஆஃப்பில் சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வென்றது
மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வீரர்கள் ஹர்திக் பாண்டியா குறித்து நல்ல முறையில் எதுவும் சொல்லாத காரணத்தினால் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று இந்திய முன்னால் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






