தற்போதுள்ள இளம் தலைமுறை மக்களிடையே சிவப்பு பந்து கிரிக்கெட் தொடரான டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மக்களிடையே ஆர்வத்தை அதிகரிக்க இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில ஆலோசனைகளை கூறியிருக்கிறார்.
வளர்ந்து வரும் நவீன உலகத்திற்கு ஏற்ப தற்போது கிரிக்கெட்டும் மாறி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து அதன் வடிவத்தை குறைத்து மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் 2007ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் காரணமாகவே இந்தியாவில் டி20 வடிவத்தில் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்திய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலக மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டியது.
கலர் கலரான ஜெர்ஸிகள், வண்ணமயமான மைதானங்கள் என பிரான்சிஸ் கிரிக்கெட் தொடர் உலகமெங்கும் பரவி தற்போது அதன் வடிவம் மேலும் குறைந்து டி10 வடிவ கிரிக்கெட் தொடர்களும் விளையாடப்பட்டு வருகின்றன. வெள்ளை பந்து கிரிக்கெட்டின் அதிகமான வரவால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 12 அணிகள் விளையாடி வரும் நிலையில், அதன் எண்ணிக்கையை 6 ஆக குறைக்க வேண்டும் என்று சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டில் தரம் இல்லாத போது அதன் மதிப்பீடு குறையும் போது மக்களிடையே ஆர்வமும் குறையும். அப்படி ஆர்வம் குறையும் போது இது அர்த்தமற்ற கிரிக்கெட் ஆகிவிடுகிறது.
கிரிக்கெட் தொடரில் தற்போது 12 டெஸ்ட் மேட்ச் அணிகள் இருக்கின்றன. அதை ஆறு அல்லது ஏழு அணிகளாக குறைத்து வலுவான அணிகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வகையில் அமைக்கப்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான மற்றும் ஓரளவு வலுவான என்று இரண்டு அடுக்குகள் உள்ளன. இதன் ஆர்வத்தை அதிகரிக்க முதல் வலுவான ஆறு அணிகள் மட்டுமே மோத வேண்டும். நீங்கள் கிரிக்கெட்டை டி20 வடிவம் போன்று பல வழிகளிலும் பரப்பலாம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:350 முதல் 400 முறை.. எங்க உலகக்கோப்பை கனவை கலைத்தது இந்த இந்தியர்தான் – இம்ரான் தாஹிர் பேட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆர்வத்தை அதிகரிக்க வலுவான முதல் ஆறு அணிகள் மட்டுமே மோத வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். வேண்டுமானால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதி போன்று நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தவாறு விதிகளை மாற்றி வரும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல யுக்திகளை கொண்டு வரலாம்.