இலங்கை தொடர்.. இந்திய அணிக்கு புதிய பவுலிங் கோச்.. யார் இந்த சாய்ராஜ் பஹுதுலே.?

0
2427

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கை சென்று மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக இந்திய அணிக்கு தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளராக மும்பையைச் சேர்ந்த சாய்ராஜ் பஹுதுலே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் ராகுல் டிராவிட் கூட்டணி பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், கௌதம் கம்பீர் தலைமையில் ஆன புதிய குழு தற்போது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று இருக்கிறது.

- Advertisement -

மோர்னி மோர்கல்தான் இந்தியாவின் அடுத்த பந்துவீச்சு பயிற்சியாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவர் செப்டம்பர் மாதம் இந்திய அணியினருடன் இணைய இருப்பதால் அதற்கு முன்னதாக தற்காலிக பயிற்சியாளராக சாய் ராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையைச் சேர்ந்த இந்தியாவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் ஆல் ரவுண்டர் ஆன இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோருடன் ஒன்றாக பணிபுரிந்து துணைப் பணியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

- Advertisement -

சாய்ராஜ் பஹுதுலே இந்திய அணிக்காக 1997 ஆம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் எட்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 188 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 26.00 பந்துவீச்சு எக்காணமியில் 630 விக்கெட்டுகளும், 31.83 பேட்டிங் சராசரியில் 6176 ரன்களும் குவித்திருக்கிறார்.

இவர் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்களுடன் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.இவரது பயிற்சி டி20 அணியில் இடம் பிடித்திருக்கிற வாஷிங்டன் சுந்தர் ரவி பிஸ்னாய், மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோருக்கும் ஒரு நாள் தொடரில் இடம் பிடித்திருக்கிற குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் பெரிய உதவியாக இருக்கும். கடந்த வருடத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தொடரின் போதும் இந்திய அளவில் முக்கிய அங்கம் வகித்தார்.

இதையும் படிங்க:பும்ரா 140 கிமீ வேகத்தில் வீசினா..150 கிமீ மாதிரி தெரியும்.. ஏன்னா காரணம் இதுதான் – கபில்தேவ் பேட்டி

அது மட்டுமல்லாமல் 2017ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிறப்பு மையத்தில் ஆஸ்திரேலிய இளம் பந்துவீச்சாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். 51 வயதான இவர் தற்போது ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டில் விதர்பா, பெங்கால், கேரளா மற்றும் குஜராத் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -