பும்ரா 140 கிமீ வேகத்தில் வீசினா..150 கிமீ மாதிரி தெரியும்.. ஏன்னா காரணம் இதுதான் – கபில்தேவ் பேட்டி

0
675

இந்திய அணியின் ஜாம்பவான் பந்து வீச்சாளராக கருதப்படும் 30 வயது ஆன ஜஸ்பிரித் பும்ரா இந்த தலைமுறையின் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். இவரது பந்துவீச்சு வேகத்தை கணக்கிட்ட கபில்தேவ் அது பேட்ஸ்மேனுக்கு வரும்போது என்ன மாதிரியான உணர்வை கொடுக்கிறது என்று சில முக்கிய கருத்தைக் கூறியிருக்கிறார்.

ஒரு ஓவரில் இவ்வளவு ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒரு கேப்டன் பும்ராவிடம் பந்தைக் கொடுத்தால் அது 99 சதவீதம் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பாகவே அமையும். அந்த அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே பும்ராவின் பந்துவீச்சு மிக அபாரமாக இருந்து வருகிறது. எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் தனது பந்துவீச்சின் மூலமாக விரைவில் ஆட்டம் இழக்க செய்து விடுகிறார்.

- Advertisement -

இதற்கு தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை ஒரு நல்ல உதாரணமாக சொல்லலாம். இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா பும்ராவின் கைகளில் பந்தை கொடுக்க, அந்த இரண்டு ஓவர்களில் ஆட்டத்தின் சூழ்நிலையையே மாற்றி வெற்றி வாய்ப்பை இந்திய அணியின் பக்கம் சாய்த்தார்.

உலகக்கோப்பை வெற்றி விழாவில் ஜாம்பவான் விராட் கோலி பும்ராவை ஒரு தலைமுறை சிறந்த பந்துவீச்சாளர் என்று பாராட்டி பேசி இருக்கிறார். அந்த அளவிற்கு இந்திய அணியின் சொத்தாக விளங்கிவரும் பும்ரா 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினால் அது பேட்ஸ்மேனுக்கு வரும்போது 150 கிலோமீட்டர் வருவதாக உணரப்படும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர கபில்தேவ் கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் பும்ரா குறித்து விரிவாக கூறும்பொழுது “பும்ரா மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினால், அது 150 கிலோ மீட்டர் வேகத்தில் வருவதாக பேட்ஸ்மேனால் உணரப்படும். இதற்குக் காரணம் அவர் பந்தை தாமதமாக கையில் இருந்து ரிலீஸ் செய்வதால் பேட்ஸ்மேன்கள் தங்களை சரி செய்வதற்கு குறைவான நேரமே கிடைக்கிறது. இதனால் இந்த வேகம் சாத்தியமாக உள்ளது.

இதையும் படிங்க:147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு.. முதல் முறையாக சாதித்துக் காட்டிய இங்கிலாந்து.. ரூட் புரூக் தெறி சதம்

அவரைப் போன்ற பந்துவீச்சாளரை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களின் எதிர்வினை வேகம் மிக விரைவாக இருக்க வேண்டும். நான் பந்து வீசும் போது பந்து மேலே இருந்து ரிலீஸ் வரை பார்க்கலாம். ஆனால் பும்ரா பந்து வீசும் போது பந்தை மிகவும் தாமதமாக விடுவிப்பார். இதனால் பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கபில்தேவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -