உறுதியா சொல்றேன்.. அந்த இந்திய டீம்ல என் பேர் இருக்கும்.. ஆனா என் திட்டமே வேற – சாய் சுதர்சன் பேட்டி

0
326
Sai

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சன் தன்னுடைய கவனம் தற்போது எதில் இருக்கிறது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தோப்பியே கைவசம் வைத்திருப்பதுடன் முதல் முறையாக ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 600 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். மேலும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இந்திய ஏ அணி வாய்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து ஏ அணி உடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி விளையாடுகிறது. இதில் பல இந்திய நட்சத்திர வீரர்கள் பெயர் இடம் பெற்று இருந்தாலும் சாய் சுதர்சன் மற்றும் கில் பெயர் இடம் பெறவில்லை. இவர்களுடைய பெயர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இவர்கள் இருவரும் பிளே ஆப் சுற்றில் விளையாட இருக்கிறார்கள். எனவே இவர்களால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய ஏ அணிக்கு விளையாட முடியும். அதே சமயத்தில் சாய் சுதர்சன் இந்திய ஏ அணியில் தன்னுடைய பெயர் நிச்சயம் இடம்பெறும் என உறுதியாக நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என் கவனம் இதில்தான்

இது குறித்து சாய் சுதர்சன் பேசும்பொழுது “நான் இந்திய ஏ அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய முழு கவனமும் தற்பொழுது ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் மட்டுமே இருக்க வேண்டும். இது முடிந்த உடன்தான் நான் இந்திய ஏ அணி வாய்ப்பு பற்றி யோசிக்க முடியும். அது குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு சிறந்த அனுபவமாக அமையும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : இங்கிலாந்து டூர்.. நான் இந்த வீரரை செலக்ட் பண்ண தயாரா இல்ல.. எனக்கு அந்த பையன் வேணும் – அகர்கர் பிடிவாதம்

“ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் நீங்கள் எந்த புது முயற்சியையும் நடுவில் செய்து பார்க்க முடியாது. மேலும் எங்களுடைய மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் சிறப்பாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதிகம் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரூதர்போர்டு சில போட்டிகளில் மிடில் ஆர்டரில் வந்து எங்களை வெல்ல வைத்தார். நேற்று ஷாருக்கான் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார். எனவே எங்கள் மிடில் ஆர்டர் குறித்து கவலை இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -