இங்கிலாந்து டூர்.. நான் இந்த வீரரை செலக்ட் பண்ண தயாரா இல்ல.. எனக்கு அந்த பையன் வேணும் – அகர்கர் பிடிவாதம்

0
562
Agarkar

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரரை தேர்வு செய்ய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான அணித் தேர்வு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் புதிய கேப்டன் தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

கவலை தரும் பவுலிங் யூனிட்

தற்போது இந்திய தேர்வுக் குழுவுக்கு இந்திய ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்டை தேர்வு செய்வதுதான் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. காயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கும் பும்ராவை ஐந்து டெஸ்ட் போட்டிகளும் விளையாட வைக்க முடியாது என்பதால் அவர் விளையாடாத இரண்டு போட்டிகளில் சமமான ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்க தேடுதல் நடக்கிறது.

அதே சமயத்தில் பவுலிங் ஃபார்ம் இல்லாததால் முகமது சிராஜ் வெளியில் இருக்கிறார். இவரை மீண்டும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யலாமா வேண்டாமா? என்கிற குழப்பம் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் முகமது ஷமி இன்னும் முழுமையான முறையில் திரும்பி வரவில்லை. மேலும் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரை அழைத்துச் செல்ல வேண்டிய தேவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அகர்கர் காட்டும் பிடிவாதம்

இந்த நிலையில் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பழைய முறையில் சிறப்பாக இல்லாததாலும், அதே சமயத்தில் அவர் ஒரு நாளில் தொடர்ந்து பத்து ஓவர்கள் தாண்டி வீச முடியுமா? என்பதில் தான் சந்தேகமாக இருப்பதாகவும், எனவே அவர் விஷயத்தில் ரிஸ்க் எடுத்து இங்கிலாந்து அழைத்துச் செல்ல விருப்பமில்லை என்றும் அகர்கர் தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் தெரிவிக்கிறது. எனவே முகமது ஷமி தேர்வு செய்யப்படாமல் போகவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : 64 பந்து 117 ரன்.. நான் சொல்றேன் ஐபிஎல்தான் உலகின் பெஸ்ட் சீரிஸ்.. காரணம் இதுதான் – மிட்சல் மார்ஸ் பேட்டி

மேலும் இடதுகை வேகப் பந்துவீச்சாளருக்கான இடத்தில் கலீல் அகமது அல்லது அர்ஷ்தீப் சிங் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதில் அகர்கர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்ய விரும்புவதாகவும் செய்திகள் கூறுகிறது. இந்த வாரத்திற்குள் இந்திய அணி தேர்வு வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

- Advertisement -