சாய் சுதர்சன் சதம்.. இந்திய அணியில் சான்ஸ் கிடைக்குமா?.. இங்கிலாந்து லயன்ஸ் போராட்டம்

0
595
Sai

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட நான்கு நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடுகிறது.

தற்பொழுது இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிய, இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்து நேற்று முன்தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே துவங்கியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் 65, சரண்ஸ் ஜெயின் 64 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணியை இந்திய ஏ அணி 199 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 64 ரன்கள் எடுத்தார். ஆகாஷ் தீப் இந்திய ஏ அணி தரப்பில் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 240 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் அடித்திருக்கிறார். மீண்டும் சரண்ஸ் ஜெயின் 63 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இவர்களுக்கு அடுத்தபடியாக திலக் வர்மா 46, குமார் குஷ்கரா 40, ரிங்கு சிங் 38, ஆகாஷ் தீப் 31 ரன்கள் எடுக்க இந்திய ஏ அணி 409 சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 403 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளை கடைசி நாளில் 320 ரன்கள் அந்த அணியின் வெற்றிக்கு தேவை. இந்திய அணி இந்த போட்டியை வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “தயவுசெய்து ஜெய்ஸ்வாலை விட்டு விடுங்கள்.. இதுவரைக்கும் செஞ்சது போதும்” – கம்பீர் பேட்டி

இந்தத் தொடரில் சாய் சுதர்சன் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதே சமயத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே அதில் சாய் சுதர்சனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும்.