நேற்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர்சிபி அணியை அவர்களுடைய சொந்த மைதானத்தில் வைத்து வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிராஜ் பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் பேட்டிங் மிகவும் அபாரமான முறையில் இருந்து வருகிறது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் விளையாடி இருக்கும் முதல் மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார். நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் எடுத்து தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை தவறவிட்டார்.
ஐபிஎல் தொடரில் கடந்த ஏழு ஆண்டுகளாக சிராஜ் ஆர்சிபி அணிக்காக விளையாட வந்தார். இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் சிராஜை கழட்டிவிட்டது. இந்த நிலையில் ஏலத்தில் சிராஜை குஜராத் டைட்டன்ஸ் அணி நல்ல விலைக்கு வாங்கியது. நேற்று அவர் முதல் முறையாக ஆர்சிபி அணிக்கு எதிராகவும் விராட் கோலிக்கு எதிராகவும் ப்ந்து வீசினார்.
நேற்றைய போட்டியில் சிராஜ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் தந்து மூன்று முக்கிய விக்கெட் கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் அவருடைய வரலாற்றில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அவருடைய சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது. ஆர்சிபி அணிக்காக இத்தனை ஆண்டுகள் அதே மைதானத்தில் பல போட்டிகள் விளையாடிய போதிலும் இதுவே சிறந்த பந்துவீச்சாக அமைந்தது வினோதமாக இருந்தது.
இந்த நிலையில் சிராஜ் பற்றி பேசி இருக்கும் சாய் சுதர்சன் கூறும்பொழுது “நான் சிராஜ் பாய் மட்டுமே நம்புவேன். அவர் ஒரு கேம் சேஞ்சர். அவர் அணிக்குள் கொண்டுவரும் அணுகுமுறை மற்றும் ஆற்றல் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறது. இதை நான் மிகவும் விரும்பி ரசித்தேன். சிராஜ் பாய் கேம் சேஞ்சர் என்பதால் அவர் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நான் நம்பினேன், அதுவே நடந்தது”
இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம் எங்களுக்கு துரோகம் செய்யுது.. தயவு செஞ்சு ஓடி வந்துருங்க – பசித் அலி விமர்சனம்
“முதல் இரண்டு ஆட்டங்களில் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு எதிராக பவர் பிளேவை நல்ல முறையில் ஆரம்பித்தார்கள். நல்ல ரிதத்தில் இருக்கும் அணியை தோற்கடித்தது எங்களுக்கு நல்ல ஊக்கமாக அமையும். மேலும் தற்போது நாங்கள் விளையாடுவதில் தொடர்ந்து விளையாடுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.