நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார் என்பது குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல் சனிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். ஐந்தாவது போட்டியில் விளையாடியிருக்கும் அவருக்கு இந்த தொடரில் மூன்றாவது அரைசதம் இதுவாகும்.
ஆரஞ்சு தொப்பி ரேஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரணிடம் இருக்கிறது. அவர் 5 போட்டிகளில் மூன்று அரை சதங்களுடன் 288 ரன்கள் எடுத்திருக்கிறார். அதே சமயத்தில் சாய் சுதர்சன் 5 போட்டிகளில் 3 அரை சதங்களுடன் 273 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரை தற்போது ரசிகர்கள் பொதுவாக லெப்ட் ஹேண்ட் விராட் கோலி என்று கூறும் அளவுக்கு இவரது சீரான ரன் குவிப்பும் சிறப்பாக மாறி வருகிறது.
தன்னுடைய பேட்டிங் குறித்து பேசி இருக்கும் சாய் சுதர்சன் கூறும் பொழுது “நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அணியில் இருந்து சரியான உள்ளீடுகள் தரப்படுகின்றன. விளையாட்டின் அடிப்படையில் நான் எதை மேம்படுத்த முடியும், சூழ்நிலையின் அடிப்படையில் எதை நான் சரியாக செய்ய முடியும், யாரை குறி வைத்து நான் சிறப்பாக ரன் குவிக்க முடியும் என்பது குறித்து எனக்கு நல்ல ஐடியா என் அணி தருகிறது. அதே சமயத்தில் நான் விரும்புகின்ற செயலை செய்வதற்கும் சுதந்திரம் தரப்படுகிறது”
இது நடந்தால் அது நடக்கும்
“வெளிப்படையாகவே நீங்கள் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்றால் இந்திய அணியில் உங்களுக்கு கதவுகள் திறக்கும். நான் அதற்கான முயற்சி செய்கிறேன். ஆனால் தற்போது நம் கையில் இருப்பது ஐபிஎல் குஜராத் அணி கோப்பையை வெல்வதுதான். எனவே நான் இந்த புள்ளியில் மிக அதிக கவனம் செலுத்துகிறேன்”
இதையும் படிங்க : CSK vs KKR.. இப்பவும் பிளே ஆப் போலாம்.. பிளேயிங் XI வேணும்.. மாஸ் செலக்சன்.. கிரிக்கெட் வல்லுனர்கள் தேர்வு
“நான் மிகவும் நன்றாக விளையாடி ரன்கள் குவித்து, என்னுடைய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இது நடக்கும் என்றால் நான் இந்திய அணிக்கு தேர்வு ஆவதற்கு இது ஒரு துணைப் பொருளாக மாறும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






