CSK vs KKR.. இப்பவும் பிளே ஆப் போலாம்.. பிளேயிங் XI வேணும்.. மாஸ் செலக்சன்.. கிரிக்கெட் வல்லுனர்கள் தேர்வு

0
737
CSK

நாளை சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன் எப்படி அமைந்தால், தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது? என்று பார்க்கலாம்.

தற்போது சிஎஸ்கே அணி விளையாடி இருக்கும் முதல் ஐந்து போட்டியிலும் இரண்டாவது பேட்டிங் செய்திருக்கிறது. முதல் போட்டியில் மட்டுமே மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த நான்கு போட்டிகளிலும் 180 க்கு மேற்பட்ட ரன்களை துரத்த முடியாமல் தோல்வியடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே செய்ய வேண்டிய முதல் மாற்றம்

தற்போது சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பவர் ஹிட்டர்கள் இல்லாமல் இருப்பதுதான். தற்போதைக்கு சிவம் துபே மற்றும் தோனி இருவர் மட்டுமே பவர் ஹிட்டர்களாக இருக்கிறார்கள். எனவே பதிரனா சிறப்பாக இருந்தாலும் கூட அவரை நீக்கிவிட்டு ஜெமி ஓவர்டன்னை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பவர் ஹிட்டர் கிடைப்பதால் சிஎஸ்கே பேட்டிங் யூனிட் வலிமையாகும்.

இத்துடன் முகேஷ் சௌத்ரி விளையாடுகின்ற இடத்தில் அன்சூல் காம்போஜ் கொண்டுவரப்பட வேண்டும். இந்த இரண்டு மாற்றங்களும் தற்போதைக்கு மிக தேவையாக இருக்கிறது. இதை செய்தால் ஓரளவுக்கு 150 ரன்கள் தாண்டி துரத்துவதற்கு வலிமை கிடைக்கும். ஆனால் இந்த இரண்டு மாற்றங்களையும் செய்வார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

- Advertisement -

ருதுராஜ் செய்ய வேண்டிய மாற்றங்கள்

தற்போது கேப்டனாக இருந்து வரும் ருதுராஜ் பந்துவீச்சாளர்களை மிக மோசமாக சுழற்றி வருகிறார். போட்டியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்களுக்கு ஓவரை முடிப்பதில்லை, அணியின் முக்கிய பவுலர் நூர் அகமதுவுக்கு இரண்டு போட்டிகளாக ஓவரை முடிக்கவில்லை, மேலும் பவர் பிளேவில் ரவிச்சந்திரன் அஸ்வினை தொடர்ந்து பந்து வீசவைத்து அடி வாங்க வைக்கிறார்.

எனவே கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக இல்லாவிட்டால் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அடிவாங்கவே செய்வார்கள். பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தி எதிரணியின் மேல் அழுத்தத்தை செலுத்த ருதுராஜ் தவறுகிறார். இதுவும் சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

இதையும் படிங்க : சிஎஸ்கே மும்பை செஞ்சது தப்பு.. ராகுல் திவாட்டியா அந்த சம்பவம் எப்படி செஞ்சார்னு கொஞ்சம் யோசிங்க – முகமது கைஃப்

சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்தரா, சிவம் துபே, தோனி, ஜேமி ஓவர்டன், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அன்சூல் காம்போஜ், நூர் அகமத் மற்றும் இம்பேக்ட் பிளேயராக கலீல் அகமத்.

- Advertisement -