குஜராத் அணிக்காக அறிமுக ஐபிஎல் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ள தமிழக வீரர் சாய் சுதர்ஷன் – குவியும் பாராட்டுக்கள்

0
360
Sai Sudharsan Gujarat Titans

இந்த வருட ஐ.பி.எல்-ன் இளம் திறமைகளைக் கண்டறிவதற்காக. ஒவ்வொரு அணிகளும் ஆடும் லெவனில் மாற்றங்களைச் செய்ய தயாராகவே இருக்கின்றன. காரணம் புதிய இரண்டு அணிகளின் வருகையால் தேவையான வீரர்களுக்கான பற்றாக்குறை உருவாகியுள்ளது.

லக்னோ அணி ஏலத்தில் அடிப்படை விலைக்கு வாங்கிய, அனுபவமற்ற இளம் வீரரான ஆயுஷ் பதோனியை ஆடும் லெவனில் எடுத்ததோடு, நெருக்கடியான நேரத்தில் களமிறக்கவே செய்தது. அவர் அதில் தேறி, இப்போது லக்னோ அணியின் நிரந்தர வீரராகவே மாறிவிட்டார்.

- Advertisement -

லக்னோ அணியைப்போலவே குஜராத் அணியும், தேவைக்காக அனுபவமற்ற இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனை, இன்றைய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் இறக்கி பரிசோதிக்கிறது. சாய் சுதர்சனும் இந்தப் பரீட்சையில் தேறி விட்டாரென்றே கூற வேண்டும்.

தற்போது கிரிக்கெட் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான ரபாடாவை, தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தும், இந்தத் தொடரில் சிறந்த எகானமி வைத்திருக்கும் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் வந்ததும், அவரது முதல் பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பியதும், ஓடியன் தாமஸின் மணிக்கு 140கி.மீ வேகத்தில் வந்த பந்தை அனாசயமாக அழகாக கவர்-டிரைவில் பவுண்டரி ஆடியதென, அடித்த 35 ரன்களில், பதட்டமில்லாமல், வேகம், சுழலென எல்லாவற்றிலும் சிறப்பான பேட்ஸ்மேனாகவே தெரிகிறார்.

இவரது தந்தை ஆர்.பரத்வாஜ் தெற்காசிய பெடரேக்சன் கேம்ஸில் இந்தியா சார்பாக தடகளத்தில் கலந்து கொண்டவர். இவரது தாய் உஷா அவர்கள் மாநிலத்திற்காக கைப்பந்து போட்டிகளில் விளையாடிவர். இப்படி இவரது குடும்பமே விளையாட்டு சார்ந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -