ஒன்றல்ல, இரண்டல்ல… மூன்று சாதனை பட்டியலில் இடம்பிடித்த சாய் சுதர்சன்! – பட்டியல்கள் உள்ளே!

0
539

பைனலில் சிஎஸ்கே அணிக்கெதிராக 96 ரன்கள் அடித்த சாய் சுதர்சன் சில சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவற்றை பின்வருமாறு காண்போம்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணிக்கு சகா 54 ரன்கள் மற்றும் கில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

3ஆவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமாக ஆடினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்தபின் தனது கியரை மாற்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் பத்திரனா ஆகியோரின் ஓவர்களில் நிறுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி அடுத்த 14 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க, 47 பந்துகளில் 96 ரன்கள் அடித்து போட்டியின் கடைசி ஓவரில் அவுட்டானார். இதன் மூலம் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இருப்பினும் 96 ரன்கள் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார். என்னென்ன சாதனைகள் என்பதை பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

ஐபிஎல் பைனலில் 50+ ஸ்கொர் அடித்த இளம் வீரர்கள்

  1. 20 வயது, 318 நாட்கள் – மனன் வோஹ்ரா(பஞ்சாப்) vs கொல்கத்தா, பெங்களூரு, 2014 .
  2. 21 வயது, 226 நாட்கள் – சாய் சுதர்சன்(குஜராத்) vs சிஎஸ்கே, அகமதாபாத், 2023.
  3. 22 வயது, 37 நாட்கள் – சுப்மேன் கில்(கொல்கத்தா) vs சிஎஸ்கே, துபாய், 2021.
  4. 23 ஆண்டுகள், 37 நாட்கள் – ரிஷப் பண்ட்(டெல்லி) vs மும்பை, துபாய், 2020.

ஐபிஎல் பைனலில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கொர்

  1. 117* – ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) vs ஹைதராபாத், மும்பை வான்கடே, 2018.
  2. 115* – விருத்திமான் சாஹா (பஞ்சாப்) vs கொல்கத்தா, பெங்களூரு, 2014.
  3. 96 – சாய் சுதர்சன் (குஜராத்) vs சிஎஸ்கே, அகமதாபாத், 2023.
  4. 95 முரளி விஜய் (சிஎஸ்கே) vs பெங்களூரு, சென்னை, 2011.
  5. 94 – மணீஷ் பாண்டே (கொல்கத்தா) vs பஞ்சாப், பெங்களூரு, 2014.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத வீரர் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில் அடித்த அதிகபட்ச ஸ்கொர்

  1. 112* – ரஜத் படிதார் (ஆர்சிபி) vs லக்னோ, கொல்கத்தா, 2022 எலிமினேட்டர்
  2. 96 – சாய் சுதர்சன் (குஜராத்) vs சிஎஸ்கே, அகமதாபாத், 2023 பைனல்
  3. 94 – மணீஷ் பாண்டே (கொல்கத்தா) vs ஆர்சிபி, பெங்களூரு, 2014 பைனல்
  4. 89 – மன்விந்தர் பிஸ்லா (கொல்கத்தா) vs சிஎஸ்கே, சென்னை, 2012 பைனல்.