நடப்பு ஐபிஎல் தொடரில் எட்டாவது போட்டியில் ஐந்தாவது அரை சதம் அடித்த சாய் சுதர்சன் முதல் ஆளாக பிரம்மாண்ட இலக்கை முதல் வீரராக தொட்டு அசத்தியிருக்கிறார். இடதுகை விராட் கோலி என ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அவருடைய ரன் குவிப்பு சீராக இருந்து வருகிறது.
இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த போட்டியில் கீழே இருக்கும் கேகேஆர் அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கியது.
கில் – சாய் சுதர்சன் அபார ஆட்டம்
இன்றைய போட்டிக்கான ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. இந்த நிலையில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய வந்தது. ஆடுகளம் எதுவாக இருந்த காரணத்தினால் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் பொறுப்பாக மெதுவாக ஆரம்பித்தார்கள். அங்கிருந்து பவர் பிளவில் விக்கெட் இழப்பில்லாமல் 45 ரன்கள் எடுத்தார்கள்.
இதைத் தொடர்ந்து இருவருமே அதிரடியில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதத்தை கடந்தார்கள். மேலும் 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லுக்கு இது மூன்றாவது அரை சதமாகவும், சாய் சுதர்சனுக்கு இது எட்டாவது போட்டியில் ஐந்தாவது அரை சதமாகவும் அமைந்தது.
முதல் வீரராக சாய் சுதர்சன் அசத்தல்
இந்த நிலையில் அரை சதம் அடித்த சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 400 ரன்களை எட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 415 ரன்கள் குவித்து தற்போது அதிக ரன் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சன் மீண்டும் கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் 368 ரன்கள் எடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க : 17 வயசு பையனை 2 வருஷமா கவனிக்கிறேன்.. அவருக்கு நான் வைக்கும் ஒரே கோரிக்கை இது மட்டும்தான் – சூர்யகுமார் யாதவ்
2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் :
சாய் சுதர்சன் ஜிடி – 415
நிக்கோலஸ் பூரன் எல்.எஸ்.ஜி – 368
சூர்ய குமார் யாதவ் எம்.ஐ – 333
விராட் கோலி ஆர்சிபி – 322
ஜோஸ் பட்லர் ஜிடி – 315
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆர்.ஆர் – 307
மிட்செல் மார்ஷ் எல்.எஸ்.ஜி – 299
எய்டன் மார்க்ரம் எல்.எஸ்.ஜி – 274
கேஎல் ராகுல் டிசி – 266
சுப்மன் கில் ஜிடி – 265






