17 வயசு பையனை 2 வருஷமா கவனிக்கிறேன்.. அவருக்கு நான் வைக்கும் ஒரே கோரிக்கை இது மட்டும்தான் – சூர்யகுமார் யாதவ்

0
259

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் 17 வயது இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்தது.

இந்த சூழ்நிலையில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூரியகுமார் யாதவ் பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

அசத்திய 17 வயது சிஎஸ்கே வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு தோல்விகளை இதுவரை சந்தித்து கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டது. இனி மீதமுள்ள ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் சென்னை அணியின் தற்போதைய பார்ம் வைத்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் மும்பையைச் சேர்ந்த ஆயுஸ் மாத்ரே வாய்ப்பு பெற்றார்.

ராகுல் திருப்பாதிக்கு பதிலாக நேற்றைய போட்டியில் வாய்ப்பு பெற்ற நிலையில் 15 பந்துகளை ஏற்றுக்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 32 ரன்கள் குவித்து தனது முத்திரையை பதித்து விட்டு வெளியேறினார். இவரது ஆக்ரோஷமான அணுகுமுறை சிஎஸ்கே அணியிடம் இதுவரை இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இவரது ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்தச் சிறுவனை பாராட்டி சில வார்த்தைகள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் கோரிக்கை

இளம் வீரர் குறித்து சூர்யா வெளியிட்ட வீடியோவில் “ஆயுஷ் ரொம்ப நல்ல பையன் என்று நான் நினைக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் அவரை கவனித்துக் கொண்டு வருகிறேன். அவரது கடின உழைப்பு, அவர் பயிற்சி பெறும் விதம் அனைத்துமே அவரது வாழ்க்கையில் முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். அவரது ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது என்னவென்றால் இவர் விளையாட்டுக்கு நேர்மையாக இருக்கக்கூடிய ஒரு வீரராக இருக்கிறார்.

இதையும் படிங்க:பாவம் சின்ன பையனுக்கு அபராதம் போட்டிங்களே.. இப்போ இதை என்ன சொல்றது.? கோலியை மறைமுகமாக விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

முதல் ஆளாக பயிற்சிக்கு வந்து கடைசி ஆளாக வெளியேறுவது ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் ஆகும். மேலும் அவரது பயணத்தை நான் மிக நெருக்கமாக பார்த்திருக்கிறேன் என்று தெரியும். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், அவருக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு அவரிடம் கூறுவதற்கு ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது. அது என்னவென்றால் விளையாட்டுக்கு எப்போதுமே நேர்மையாக இருங்கள் என்பதுதான்” என்று சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -