ரிஷப் பண்ட் முன்ன மாதிரி கிடையாது.. அவர் எங்களுக்கு சொன்ன மெசேஜ் இதுதான் – சாய் சுதர்சன் பேட்டி

0
79
Sai

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ரிஷப் பண்ட் முன்பை விட சிறப்பாக இருக்கிறார் என இந்திய மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காலில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது உடன் தகுதி பெற்று மீண்டும் வந்திருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க ஏ அணி

மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க அணி அடுத்து நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி துவங்குகிறது.

இதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் பயிற்சி பெறும் விதமாக தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்திய ஏ அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய ஏ அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சொன்ன மெசேஜ்

இதுகுறித்து சாய் சுதர்சன் பேசும் பொழுது “ரிஷப் பண்ட் தற்பொழுது அருமையாக இருக்கிறார். என்னை கேட்டால் அவர் முன்பை விட பிட்டாக இருக்கிறார் என்று நான் சொல்வேன். அவர் தன்னுடைய கால்களை வலுப்படுத்தவும் மேலும் பயிற்சி பெறவும் அவருக்கு கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது. நீங்கள் காயமடையும் பொழுது நீங்கள் செய்வதற்கு உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். அவர் முன்பை விட பிட்டாகவும் தைரியமாகவும் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ஓவருக்கு 10 ரன்.. கம்பேக் கொடுத்து மிரட்டிய சூர்யா கில்.. அரண்டு போன ஆஸி.. மழையால் நடந்த சோகம்

“பயிற்சியின் முதல் நாளில் நாங்கள் எல்லோரும் கூட்டமாக இருந்தோம். அப்பொழுது கேப்டன் ரிஷப் எங்களுக்கு சொன்ன செய்தி மிகவும் தெளிவாக இருந்தது. போட்டிக்கான ரிதத்தை பெறுவதற்கு இது நமக்கு சிறந்த வாய்ப்பு என்று அவர் கூறினார். மேலும் அதே நேரத்தில் நாம் வெற்றிக்காகவும் விளையாட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுதான் முக்கிய விஷயம் என்று தெரிவித்தார்” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -