கோலி கிட்ட பேசி.. முக்கியமான அந்த ஒரு விஷயத்தை கத்துக்கிட்டு இருக்கேன்.. ஹெல்ப் பண்ணும் – சாய் சுதர்சன் பேட்டி

0
73
Sai

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள சாய் சுதர்சன் விராட் கோலி இடம் பேசி சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 750-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சன் கைப்பற்றி இருக்கிறார். மேலும் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

சாய் சுதர்சன் சூப்பர் ஸ்டார்

உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் சாய் சுதர்சனுக்கு பெரிய சாதனைகள் எதுவும் கிடையாது. ஆனால் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் அவரால் சாதிக்க முடியும் என நம்பி அணியில் தேர்வு செய்திருப்பதாகவும், அதற்கான திறமையை அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

இத்துடன் பல வெளிநாட்டு வீரர்களும் சாய் சுதர்சனுக்கு அதிகபட்ச பேட்டிங் திறமை இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாய் சுதர்சனை சூப்பர் ஸ்டார் என்றும், அவரிடம் எல்லா ஷாட்டும் இருப்பதாகவும், அவர் பேட்டிங் செய்வதை பார்க்க தான் விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். இந்த அளவிற்கு சாய் சுதர்சன் மீது கிரிக்கெட் உலகம் பெரிய அளவில் நம்பிக்கை வைத்து இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலியிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்

இதுகுறித்து சாய் சுதர்சன் பேசும்பொழுது ” நான் ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவருக்கு அது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணமாக இருந்தது. அது அவருக்கு சிறப்பு வாய்ந்த தருணம். இதற்கு முன்பாகவும் நான் அவருடன் பேசி இருக்கிறேன். அவரைப் பற்றி போற்றும் மிக முக்கியமான விஷயம் அவரது மனநிலையும் விளையாட்டு மீது இருக்கும் வெறியும்தான். மேலும் கடினமான நேரங்களில் அவர் எவ்வாறு நிலைமைகளை கையாண்டார் என்பது குறித்து கேட்டிருக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக கற்றுக் கொள்ளும் மிக முக்கியமான நேரம் இதுவென்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மெகா வாய்ப்பு.. ரோகித் கில்லுக்கு பெரிய செக்.. மாறும் களம் – வெளியான புதிய தகவல்கள்

“அவரிடம் இருக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அவருடைய மனநிலை, தன்னம்பிக்கை மற்றும் தனது திறமையில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவை ஆகும். மேலும் ரன்கள் எடுக்காத பொழுது அவர் எவ்வாறு சமாளித்துக் கொள்கிறார், விளையாட்டு மற்றும் வாழ்க்கை இரண்டுக்குமான சமநிலையை அவர் எவ்வாறு பேணுகிறார் என்பதைக் குறித்து நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் பேட்டிங் ரீதியான தொழில்நுட்ப விவாதங்களும் எங்களுக்குள் நடைபெற்ற இருக்கிறது. அதுவும் எனக்கு உதவி செய்யக் கூடியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -