இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சாய் சுதர்சன் பிரம்மாண்டமான சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. குஜராத் அணியில் பிலிப்ஸ் மற்றும் அசோக் சர்மா இருவரும் நீக்கப்பட்டு ஜேசன் ஹோல்டர் மற்றும் மானவ் சுதார் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறப்பான தொடக்கம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி பவர் பிளேவை மிகவும் மெதுவாகவே அணுகி 57 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதற்கு அடுத்து மிடில் ஓவர்களில் அதிரடி காட்டி விளையாடியது. குறிப்பாக சாய் சுதர்சன் அதிரடியில் மிரட்டினார்.
இந்த நிலையில் குஜராத் அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 12.4 ஓவரில் 128 ரன்கள் வந்தது. சாய் சுதர்சன் உடன் ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் சுப்மன் கில் 24 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
சாய் சுதர்ஷன் சாதனை
இதைத்தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 57 பந்துகளில் சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் சரியாக 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மேலும் இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்த வீரராக சாதனை படைத்தார். சாய் சுதர்சன் 47 இன்னிங்களில் முதல் இடத்தில் இருக்க, இரண்டாவது இடத்தில் 48 இன்னிங்ஸ்களில் அதிரடி வீரர் வெயில் இருக்கிறார்.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா ஒரு டப்பா கேப்டன்.. ஐபிஎல்ல பயந்துகிட்டு இந்த வேலையை பார்க்கலாமா? – ஸ்ரீகாந்த் விமர்சனம்
ஐபிஎல் போட்டிகளில் 2000 ரன்களை அதிவேகமாக எட்டியவர் :
47- சாய் சுதர்ஷன்
48 – கிறிஸ் கெய்ல்
52-ஷான் மார்ஷ்
57 – ருதுராஜ் கெய்க்வாட்
60- கேஎல்.ராகுல்
62 – யஷஸ்வி ஜெயஸ்வால்
63- சச்சின் டெண்டுல்கர்
64-ரிஷப் பந்த்
64-ஷேன் வாட்சன்
65-ஜோஸ் பட்லர்






