என்கிட்ட வந்து ரசித் கானை பத்தி இதை கேட்கலாமா?.. இங்கிலாந்து வீரருக்கு சாய் கிஷோர் அசத்தல் பதில்

0
13
Kishore

நேற்று கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரஷித் கான் பந்துவீச்சு பார்ம் பற்றி இங்கிலாந்து வீரர் நிக் நைட் கேள்விக்கு சாய் கிஷோர் மிகவும் அசத்தலான முறையில் பதில் அளித்திருக்கிறார்.

இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்து 198 ரன்கள் குவித்த குஜராத் அணிக்கு, இந்த முறை பந்துவீச்சில் ரஷித் கான் சிறப்பாக திரும்பி வந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினால். இதில் அதிரடியாக ஆரம்பித்த ரசல் விக்கெட்டும். அடக்கம்.

- Advertisement -

சரிந்த ரஷீத் கானின் ஃபார்ம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு ரஷித் கான் 12 போட்டிகளில் விளையாடி ஓவருக்கு 8.40 ரன்னுக்கு மேல் கொடுத்து 10 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தால். நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் ஓவருக்கு 10 ரன்னுக்கு மேல் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார்.

அவருக்கு கடந்த ஆண்டிலிருந்து காயங்கள் பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் தோள்பட்டையில் ஆபரேஷன் செய்து கொண்டார். இதனால் அவரது வழக்கமான பந்துவீச்சில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவருடைய பந்துவீச்சு பார்ம் தற்பொழுது கொஞ்சம் பாதிப்படைந்து இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

- Advertisement -

உங்களுக்கு எப்படின்னு தெரியல

இந்த நிலையில் ரஷித் கான் குறித்து நிக் நைட் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சாய் கிஷோர் கூறும் பொழுது “ரஷித் கான் இப்பொழுதும் டி20 உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது விக்கெட் வீழ்த்தும் திறமையை மீண்டும் மீண்டும் பெறுகிறார். ஒரு தனியாக நாங்கள் அவரது திறமையை சந்தேகப்படவில்லை. ஆனால் வர்ணனைப் பெட்டியில் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. நாங்கள் அனைவரும் அவரை நம்புகிறோம் அவர்தான் டி20 உலகின் முதல் நிலை பவுலர்”

இதையும் படிங்க : 6 வருடங்கள்.. ருதுராஜை தாண்டி சாதனை படைத்த சுப்மன் கில்.. கேகேஆர் போட்டியில் சாதனை

“நாங்கள் அணி வெற்றி பெறுவது குறித்தும், முடிவுகளைக் குறித்தும் பேசவில்லை. இன்று எங்களுடைய பீல்டிங் நல்ல முறையில் இருந்தது. நாங்கள் ஒரு அணியாக எந்த பகுதியில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்துதான் எப்பொழுதும் பேசுகிறோம்” என்று கூறியிருக்கிறார். ரஷித் கான் குறித்து விட்டு தராமல் பேசி இருக்கும் சாய் கிஷோர் பற்றி தற்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -