ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை சேர்த்திருந்தாலும், அணி நிர்வாகம் இருவர் மீதும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சடகோப்பன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், நேற்று ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை அறிவிக்கும்போது, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் பங்கேற்பது குறித்து உறுதியாக பதிலளிக்கவில்லை.
கோலி மற்றும் ரோஹித் இந்த ஆண்டு முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு, 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
தேவையில்லாத அழுத்தம்:
மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இந்தியா வெற்றிபெற உதவிய பின்னர், அவர்கள் டி20 கிரிக்கெட்டிலிருந்தும் விலகினர்.கோலி மற்றும் ரோஹித்தின் இந்திய ஒருநாள் அணியில் எதிர்காலம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், “ரோஹித் மற்றும் விராட் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் என்றாலும், அவர்கள் இருவர் மீதும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இது ஒரு நிறுவனம் உங்களை நேரடியாக பணிநீக்கம் செய்யாமல், நீங்களே விலகிச் செல்லும் அளவுக்கு அழுத்தம் தருவது போன்றது. இந்திய அணி நிர்வாகம் தற்போது இந்த உத்தியை பின்பற்றுவது போல் தெரிகிறது.”
இந்திய அணி, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஷுப்மன் கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்தது, இது ஆச்சரியமளிக்கும் முடிவாக இருந்தது.
இது நல்ல முடிவு:
“தேர்வுகளில் அவர்கள் செய்த ஒரே நல்ல விஷயம், ஷ்ரேயாஸ் ஐயரை துணைக் கேப்டனாக நியமித்தது. அவர் ஐபிஎல்லில் தனது கேப்டன்ஸி திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் பேட்ஸ்மேனாக அவர் பிரகாசிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். மற்றொரு நல்ல தேர்வு. யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒருநாள் அணியில் சேர்த்தது” என்று ரமேஷ் கூறினார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்.. 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் இல்லை
ஆஸ்திரேலியாவில் வெள்ளைப் பந்து தொடர் மூன்று ஒருநாள் போட்டிகளுடன் அக்டோபர் 19 முதல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகள் நடைபெறும். இந்தியா தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் விளையாடி வருகிறது.






