ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை தொடர்ந்து, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் கான்பராவில் அக்டோபர் 29 முதல் தொடங்குகிறது.
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டிக்கு முன்பு ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயம் காரணமாக இத்தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெற்றுள்ளார்.
பவுலர்கள் யார்:
மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் 2025 ஆசியக் கோப்பையில் வெற்றிபெற்ற அணியில் இருந்து ஒரே மாற்றமாக இடம்பெற்றுள்ளார்.அணியில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் படேல், மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சு பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய முன்னணி வீரர்களுடன், ஆல்-ரவுண்டர்களான ஷிவம் துபே மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெற்றுள்ளனர்.இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸி தொடரில் யாருக்கு வாய்ப்பு:
இரு அணிகளும் கடைசியாக 2023 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடந்த டி20 தொடரில் மோதின, அப்போது இந்தியா 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியா டி20 தொடரில் மோதியது. அதில், 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதையும் படிங்க: கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கம்.. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் டிவிஸ்ட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி:சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில் (துணைக் கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் இந்திய அணி ஆறு இருதரப்பு டி20 தொடர்களையும், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் சமீபத்தில் முடிந்த ஆசியக் கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






