தற்போது சூரியகுமார் யாதவ் தான் ரன்கள் அடிக்க வில்லை என்பதை ஏற்றுக் கொண்டு மாற்றத்தை செய்துள்ளதாக பார்த்திவ் படேல் பாராட்டி பேசியிருக்கிறார்.
கடந்த 23 டி20 போட்டிகளாக சூரியகுமார் யாதவுக்கு அரை சதம் வராமல் இருந்து வந்தது. மேலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 37 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் முதல் 10 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியகுமார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்
இதுகுறித்து பார்த்திவ் படேல் பேசும்பொழுது ” நீங்கள் எதையாவது மேம்படுத்த விரும்பினால் முதலில் எது சரியாக செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் அதில் வேலை செய்து மாற்றத்தை உண்டாக்க முடியும். சூரியகுமார் இதை ஏற்றுக்கொண்டு மாற்றத்தை செய்திருக்கிறார்”
“அப்படியானால் சூரியகுமார் என்ன மாற்றத்தை செய்ய முடியும்? நீங்கள் மைதானத்தில் நின்று கொஞ்சம் பந்துகளை எடுத்துக் கொண்டு நேரம் செலவிட வேண்டும். இந்த மாற்றத்தைதான் நேற்று சூரியகுமார் யாதவ் மிகச் சரியாக செய்திருந்தார். அவர்தான் சந்தித்த முதல் 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்”
அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்
“சூரியகுமார் யாதவ் ஒரு காலத்தில் டி 20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்தார். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. அவருக்கு எப்படி ரன்கள் எடுக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் நன்றாக விளையாடியவுடன் அவரது இயல்பான ஆட்டம் திரும்பி வந்துவிடும் அதுதான் நடந்திருக்கிறது”
இதையும் படிங்க : இஷான் கிஷான் தன் இடத்துக்கு விளையாடல.. இந்திய அணி உலகத்துக்கே அந்த செய்திய சொல்லி இருக்கு – ஸ்ரீகாந்த் பாராட்டு
“லாங் ஆப் அல்லது கவரிங் சிக்ஸர் அடிக்கும் திறமை உங்களிடம் இருக்கும் போது, அப்படியான ஒரு பந்தை எடுத்து நீங்கள் பைன் லெக்கில் சிக்ஸர் அடிக்க முடிந்தால், பந்துவீச்சாளர் முற்றிலுமாக நிலை குலைந்து விடுவார். உடனடியாக அவர் தனது திட்டங்களை மாற்ற வேண்டியதாக இருக்கும். இதைத்தான் சூரியகுமார் யாரும் மிக அற்புதமாக செய்தார்; செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.






