ஐபிஎல்

வைபவ் சூரியவன்சியை போல அதிரடியா இல்லாமல் இருக்கலாம்.. ஆனா அவரோட தரம் வேறு மாதிரி – இந்திய முன்னாள் வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக பல அணிகள் தங்களது பயிற்சிகளை ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ், இந்திய வீரர் ஒருவர் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரை பொருத்தவரை அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதிரடியாக விளையாடும் வீரர்களை தான் எப்போதுமே ஐபிஎல் அணிகள் அதிக தொகைக்கு ஏலம் வாங்கும். சில தரமான பிளேயர்களை அதிக விலைக்கு வாங்குவது மட்டுமல்லாமல் பெரும்பாலும் அதிரடியான வீரர்களையே அணிகள் குறி வைக்கும்.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் சாய் சுதர்சன், சிறப்பாக விளையாடினாலும் பெரிதும் கவனிக்கப்படாத வீரராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அது குறித்து பேசி இருக்கும் சடகோபன் ரமேஷ் சாய் சுதர்சன் வைபவ் சூர்யவன்சி போல அதிரடியாக விளையாடும் வீரராக இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதில் அவர் சிகார் தவானை போன்றவர் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “எல்லைக் கோட்டுக்கு அப்பால் கவுண்டர்களை அடித்து அனுப்புவதே அவரது பெரிய பலமாகும். ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்படாத வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். அவன் ஒவ்வொரு சீசனிலும் 500 ரன்களுக்கு மேல் தொடர்ச்சியாக குவித்து வந்தார். ஆனால் அவருடைய ஆட்டங்கள் யாருடைய கவனத்தையும் பெரிதாக ஈர்க்காமல் போனது. இதனால் சாய் சுதர்சன் ரன் குவிக்கும் பாணியில் சிகார்த்தவன் போன்றே உள்ளார்.

எனவே இவரது ஆட்டம் வைபவ் சூர்யவன்சியைப் போல அதிரடியாக தோற்றம் அளிக்காது. நீங்கள் அதனை உணர்வதற்குள் அவரது இன்னிங்ஸ் கண்டு அதிர்ச்சி அடைவீர்கள் என்று அவர் பேசி இருக்கிறார். கடந்த சில சீசனங்களாக குஜராத் அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தை சாய்வு தர்ஷன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by