இந்திய டெஸ்ட் அணியின் தோல்விக்கு கம்பீர் வீரர்களை எந்த விதத்திலும் குறை சொல்லக்கூடாது என தமிழ்நாடு மற்றும் இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
எந்த ஒரு மாநில அணிக்கும் பயிற்சியாளர் பொறுப்பில் இல்லாத கம்பீர், இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை எப்படி நடத்தினார்? என்பது குறித்தும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
ஆளுக்கு ஒரு நியாயமா?
இதுகுறித்து பேசி உள்ள சடகோபன் ரமேஷ் கூறும் பொழுது ” விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பரிசீலிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் ஒருபோதும் மாநில அணிக்கு கூட பயிற்சியாளராக இருந்தது கிடையாது. அகர்கர் மாநில தேர்வுக் குழுவில் கூட இருந்தது கிடையாது. எனவே உங்களுக்கு ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு ஒரு நியாயமும் இருக்கிறது”
“இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு இது அனுபவம் மற்ற அணி என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் அனுபவம் இருந்த வீரர்களை வெளியே அனுப்பியது நீங்கள்தான். மேலும் தோல்விக்கு தன்னையும் சேர்த்து எல்லோரையும் குறை சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் இந்த இடத்தில்தான் ராகுல் டிராவிட் வேறுபடுகிறார். அவர் எந்த பழியாக இருந்தாலும் அது தனக்கு வர வேண்டும் எனவும், பாராட்டு அணிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்”
எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?
“வீரர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு பயிற்சியாளராக எழுந்து நின்று அவர்களுடைய தவறுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கான இடம் இதுதான். நீங்கள் இப்படி செய்தால் விளையாடும் பொழுது வீரர்கள் உங்களுக்காக உயிரையே கொடுப்பார்கள்”
இதையும் படிங்க : ஜடேஜா 8 வருஷம் கழிச்சே அதை சொன்னார்.. அந்த டைப் பிளேயர்ஸ கொண்டு வாங்க – முகமது கைஃப் கோரிக்கை
“டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் சூரியகுமார் யாதவ் அந்த கேட்ச் பிடிக்காமல் விட்டிருந்தாலும் கூட கேப்டன் ரோஹித் சர்மா அவரை எதுவுமே சொல்லி இருக்க மாட்டார். இந்திய அணி உலக கோப்பையை இழந்திருந்தாலும் அவர் விமர்சனம் செய்திருக்க மாட்டார். இப்படி நடந்தால் தான் ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது வீரர்களுக்கு ஈர்ப்பு உருவாகும்” என்று கூறியிருக்கிறார்.






