ஜடேஜா 8 வருஷம் கழிச்சே அதை சொன்னார்.. அந்த டைப் பிளேயர்ஸ கொண்டு வாங்க – முகமது கைஃப் கோரிக்கை

0
44
Kaif

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்படியான வீரர்கள் தேவை? அவர்களை எங்கிருந்து தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்து முகமது கைஃப் அறிவுரை கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடும் வீரர்கள் எல்லோருமே வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஸ்பெசலிஸ்ட் வீரர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் டெஸ்ட் அணுகுமுறையில் விளையாடுவது இல்லை.

- Advertisement -

கம்பீரே ஏற்றுக் கொண்டு விட்டார்

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு பேசிய கம்பீர் வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார். இப்போது இந்த விஷயத்தை அவர் புரிந்து கொண்டு விட்டார். அப்படி என்றால் இதையெல்லாம் செய்யக்கூடிய வீரர்களை அணிக்குள் கொண்டு வாருங்கள். இப்போது அணியில் இருப்பவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட் ஸ்பெசலிஸ்ட் வீரர்கள்”

“உங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணுகுமுறையை கொண்டிருக்கும் வீரர்கள் தேவை. அவர்கள் ரஞ்சி கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். சர்ப்ராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள். கருண் நாயர் இந்தியாவில் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவர் சில வாய்ப்புகளுக்குப் பிறகு கைவிடப்பட்டார்”

- Advertisement -

ஜடேஜா சிறந்த உதாரணம்

” நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக யோசித்துப் பார்த்தால் ரவீந்திர ஜடேஜா இதே அணிக்குள் இருந்து கொண்டு சிறப்பாக விளையாட முடிகிறது? அவர் ஐபிஎல் ஆரம்பித்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தவர். ஆனால் அவர் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக பேட்டிங் செய்ய ஆரம்பித்தார்”

இதையும் படிங்க : இந்திய அணி இந்தியாவை விட்டு போயிடுங்க.. அப்பதான் அந்த முக்கியமானது நடக்கும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

” ஏனென்றால் ரவிந்திர ஜடேஜா எந்த இடத்திலும் தன்னை ஆல்ரவுண்டர் என்று எடுத்ததும் அடையாளப்படுத்த வில்லை. அவர் தொடர்ந்து ஒரு பந்து வீச்சாளராகவே செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து பேட்டிங்கில் கடுமையாக உழைத்தார். பிறகு எட்டு வருடம் கழித்து வெளியில் வந்து தன்னை ஆல் ரவுண்டராக அறிவித்தார். இப்படி கடின உழைப்பை கொடுக்கும் வீரர்களை கொண்டு வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -