தற்போது உலக ஸ்பின்னர்கள் எல்லோருமே இந்திய பேட்ஸ்மேன்களை விரும்புகிறார்கள் எனவும், ஒரு காலத்தில் நிலைமை தலைகீழாக இருந்தது என்றும் சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து ஸ்பின்னர்களை மிகவும் பொறுமையாக விளையாடியது இந்திய அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சுழல் தடுமாற்றம்
இந்திய கிரிக்கெட்டில் சில காலமாகவே சுழல் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். வெள்ளைப் பந்து மற்றும் சிவப்புப் பந்து என எல்லா வடிவங்களிலும் இந்த தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது.
கடைசியாக தென் ஆப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் தனி ஒரு வீரராக இந்திய மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மண்ணைக் கவ்வ வைத்தார். இதற்கு முன்பாக நியூசிலாந்தின் மிட்சல் சான்ட்னர் மற்றும் அஜாஸ் படேல் இருவரும் இதை செய்தார்கள். தொடர்ந்து இந்திய அணி இந்த விஷயத்தில் சறுக்கி வருகிறது.
ஒரு காலத்தில் நடுங்கினார்கள்
இது குறித்து சடகோபன் ரமேஷ் பேசும் பொழுது ” இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து ஸ்பின்னர்களை சரியாக விளையாடாததுதான். அவர்களுடைய ஸ்பின்னர்கள் மொத்தம் 23 ஓவர்கள் வீசினார்கள். நாம் அதில் ஒரு ஓவருக்கு, 3.80 ரன்கள் மட்டுமே எடுத்தோம். ஆனால் அவர்கள் நம்முடைய தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் மேல் எடுத்தார்கள்”
இதையும் படிங்க : 120 SR.. பாபர் அசாமை களத்தில் அவமானப்படுத்திய ஸ்மித்.. பிக்பேஷ் தொடரில் சம்பவம்.. என்ன நடந்தது?
“தற்போது இந்திய பேட்ஸ்மேன்களை உலகெங்கும் இருக்கும் மற்ற அணிகளின் ஸ்பின்னர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். நமக்கு சுழல் பந்துவீச்சை எதிர்த்து விளையாடும் திறமை போய்விட்டது போல தெரிகிறது. ஒரு காலத்தில் தலைசிறந்த ஸ்பின்னர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களை பார்த்து நடுங்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.






