இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா ஒரு புயல் எனவும் அதே சமயத்தில் துணை கேப்டன் சுப்மன் கில் ஒரு டேபிள் ஃபேன் போல சாதாரணமாக இருக்கிறார் என தமிழக மற்றும் இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் அல்லது ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவர் அபிஷேக் ஷர்மா உடன் துவக்க வீரராக இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சுப்மன் கில் மீது பெரிய அழுத்தம் உருவாகி இருக்கிறது.
வெறும் டேபிள் ஃபேன்
இதுகுறித்து சடகோபன் ரமேஷ் பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா என்கின்ற புயல் அன்றைய நாளில் தாக்கும் பொழுது இந்திய அணி பெரிய ஸ்கோரை பெறுகிறது. உண்மையில் அபிஷேக் ஷர்மா-கில் கூட்டணியில் அபிஷேக் ஷர்மா புயல் போல தெரிகிறார். கில் டேபிள் ஃபேன் போல உணரப்படுகிறார். இதுதான் பார்ப்பதற்கு உண்மையிலேயே தோன்றுகிறது”
“உண்மையிலேயே அபிஷேக் ஷர்மா என்கின்ற புயல் அடிக்கும் நேரத்தில் டேபிள் ஃபேன் நன்றாக சுழல்கிறது எந்த பிரச்சனையும் இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் பவர் பிளேவில் புயல் தாக்காத போது டேபிள் ஃபேன் சுழல்வது கிடையாது. அது அப்படியே நின்று விடுகிறது”
அபிஷேக் ஷர்மாதான் எல்லாமே
“டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே என்பது மிகவும் முக்கியமானது. இதில் தொடக்க வீரர் யார் என்பதை பொறுத்தும், அவர் எப்படியான தொடக்கத்தை கொடுக்கிறார் என்பதை பொறுத்தும், அடுத்து வரக்கூடியவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டால், இறுதியில் ஒரு பெரிய ஸ்கோர் அணிக்கு கிடைக்கும்”
இதையும் படிங்க : இந்தியா ஆடும் தொடர் ஒண்ணுமே இல்ல.. எப்பவுமே நாங்களும் ஆஸியும் ஆடினாதான் வரவேற்பே – மைக்கேல் வாகன் பேட்டி
“அபிஷேக் ஷர்மா போன்ற ஒரு வீரர் அந்த கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு அதிரடியாக விளையாடினால் இந்தியா மிகப்பெரிய ரன்களை எடுக்கும். இல்லையென்றால் இந்திய அணி பவர் கட் ஆனது போல மாறும். எனவே டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மிகவும் முக்கியமானவராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






