இந்தியா ஆடும் தொடர் ஒண்ணுமே இல்ல.. எப்பவுமே நாங்களும் ஆஸியும் ஆடினாதான் வரவேற்பே – மைக்கேல் வாகன் பேட்டி

0
131
Vaughan

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் தொடரை விட எதிர்பார்ப்புகள் எப்பொழுதும் ஆசஸ் தொடருக்கு தான் அதிகமாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

தற்போது கிரிக்கெட் உலகில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியை மோதிக் கொள்ளும் தொடர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறதா? இல்லை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு வருடத்திற்கு ஒருமுறை விளையாடும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறதா? என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

- Advertisement -

விராட் ரோஹித் வரவேற்பு

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுகின்ற காரணத்தினால் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள். இதுவே ஆஸ்திரேலியா இங்கிலாந்து வெள்ளை பந்து தொடர்களுக்கு இந்த வரவேற்பு கிடைத்திருக்காது.

அதே சமயத்தில் கடந்த ஆண்டில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றது. அந்தத் தொடருக்கு மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் தான் இதுநாள் வரையில் ஆஸ்திரேலியாவில் அதிக ரசிகர்கள் வந்து பார்த்த தொடராகவும் அமைந்தது. இந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தான் தற்போது வரையில் உச்சத்தில் இருக்கிறது.

- Advertisement -

ஆசஸ்தான் பெரியது

இந்த ஆண்டு வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விராட் ரோஹித் ஈடு செய்ய முடியாத வீரர்கள் இல்ல.. அகர்கர் அவங்களோட நட்பா இருக்க கூடாது – ஸ்டீவ் வாக் கருத்து

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” தற்போது நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய வெள்ளை பந்து தொடர்கள் போட்டித் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் இந்தத் தொடர் எல்லாம் ஆசஸ் தொடரை விட பெரியது என்று என்னிடம் சொல்லாதீர்கள். இந்த ஆசஸ் தொடருக்கு நடக்கும் பில்டப் எப்பொழுதும் மிகப்பெரியவை. இது ஒரு போதும் இந்தியா ஆஸ்திரேலியா தொடருக்கு இருக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -