கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

சச்சின் ரெக்கார்ட் பிரேக்.. உலகக் கோப்பைகளில் விராட் கோலி உச்சம்.. இன்று ஒரு புதிய சாதனை!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பையில் இன்று இந்திய அணி 273 ரன் இலக்கை 35 ஓவர்களில் எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் வெற்றியை தனது முதல் ஆட்டத்தில் பதிவு செய்து இருந்தது. அந்த போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அந்த போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்வதற்கு சிரமமான ஆடுகளத்தில் 85 ரன்கள் எடுத்திருந்தார். சதத்தை நெருங்கி இருந்த வேலையில் தவறுதலாக விளையாடி விக்கெட்டை இழந்து இருந்தார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 63 பந்துகளில் அதிரடி சதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்திருந்த வேளையில், இஷான் கிஷான் விக்கெட் விழுந்ததும் உள்ளே வந்த விராட் கோலி தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாடினார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் 56 பந்துகளை சந்தித்த விராட் கோலி ஆறு பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இந்த அரைசதம் விராட் கோலிக்கு இந்திய மண்ணில் ஒட்டுமொத்தமாக ஐம்பதாவது அரை சதம் ஆகும். இந்த வகையில் இந்திய மண்ணில் 58 அரைசதங்கள் எடுத்து சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். 33 அரைசதங்களுடன் மூன்றாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி இருக்கிறார்.

மேலும் இன்றைய போட்டியில் 55 ரன்கள் எடுத்ததின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் இரண்டு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து அதிக ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி மாறி இருக்கிறார்.

விராட் கோலி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளில் மொத்தம் 53 இன்னிங்ஸ்களில் 2,311 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். சச்சின் 44 இன்னிங்ஸ்களில் 2,278 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சங்கக்கரா 65 இன்னிங்ஸ்களில் 2,193 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். கெய்ல் 65 இன்னிங்ஸ்களில் 2,151 ரன்கள் உடன் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts