என்னோட சப்போர்ட் நெதர்லாந்துக்கு தான் இருந்துச்சு – ட்வீட் செய்த சச்சின்! கடவுள் கணக்கு தப்புமா!

0
9181

நான் நெதர்லாந்து அணிக்கு தான் சப்போர்ட் செய்தேன் என்று மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில், அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மிபர்க்(37), மாக்ஸ்(29), டாம் கூப்பர்(35) ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் அக்கர்மன் 26 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிபர்க் 37 ரன்கள், மாக்ஸ் 29 ரன்கள், டாம் கூப்பர் 35 ரன்கள் அடித்தனர்.

சற்று சிக்கலான இலக்கை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு மீண்டும் மோசமான துவக்கம் கிடைத்தது. டி காக், பவுமா இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ரூஸோவ்(25) நிலைத்து நிற்காமல் வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் மார்க்ரம், மில்லர், பர்னல் எவரும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அவுட் ஆக 120/7 என தென்னாபிரிக்கா திணறியது. இறுதியில் இலக்கை எட்ட முடியாமல் 8 விக்கட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து நெதர்லாந்து அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தென்னாபிரிக்கா.

- Advertisement -

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில், தென்னாபிரிக்க அணிக்கு சோக்கர்ஸ் என்ற பெயர் உண்டு. இதற்கு அர்த்தம், மிகப்பெரிய அணியாக பார்க்கப்படும் தென் ஆப்பிரிக்கா சிறிய அணிகளிடம் எளிதாக தோல்வியை தழுவி வெளியேறிவிடும்.

அதற்கு ஏற்றார் போல இம்முறையும் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட நெதர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவி உலக கோப்பை தொடரை விட்டு வெளியேறி உள்ளது.

இந்த சம்பவத்தை முன்பே கணித்திருக்கிறார் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“நானும் நண்பரும் காலை உணவு சாப்பிட சென்றிருந்தோம் நான் நெதர்லாந்துக்கு செல்லலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் திணறிவிட்டார்.” என்று பதிவிட்டு இருந்தார். நான் நெதர்லாந்துக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்

தென்னாப்பிரிக்க வீரர்கள் வழக்கம்போல சோக் செய்து விடுவார்கள். ஆகையால் நெதர்லாந்தை சப்போர்ட் செய்கிறேன் அர்த்தப்படும்.