ரோகித் கிடையாது.. அகர்கர் செலக்ட் பண்ணாத அவர்தான் ஸ்பின்ல பெஸ்ட் பேட்ஸ்மேன் – சல்மான் பட் கருத்து

0
277
Butt

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை விளையாடும் விதம் தற்பொழுது இந்தியா தாண்டி பலரும் விமர்சனம் செய்யும் விஷயமாக மாறி இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிராக சுழல் பந்துவீச்சில் இந்தியா பேட்ஸ்மேன்கள் தடுமாறியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பேசி இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மொத்தம் 27 விக்கெட்டுகளை இந்திய அணி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இழந்தது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணி கொடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் இதுதான்.

- Advertisement -

இந்த காரணத்தினால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறுவது குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் மட்டும் அல்லாது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்திய அணியின் தேர்வு குறித்தும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சல்மான் பட் பேசும் பொழுது “இந்தியா முதலில் தங்களுடைய ஆடுகளங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மிகவும் தடுமாற்றத்தை கொண்டிருந்தார்கள். மேலும் நீங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடினால் டாஸ் மிகவும் முக்கியமானது. எனவே பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகங்கள் இருக்கிறது. இரண்டாவது பேட்டிங் செய்வது கடினமாகிறது.

முதலில் பேட்டிங் செய்யும் பொழுது ஆடுகளத்தில் வீரர்கள் ஓடுகின்ற காரணத்தினால் சேதம் அடைகிறது. இதனால் ஆடுகளம் கரடு முரடானதாக மாறுகிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனாலும் இந்திய அணிக்கு நன்றாக ஸ்பின் விளையாடக் கூடியவர்கள் தேவை.

- Advertisement -

இந்த நேரத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவராக சூரியகுமார் யாதவ் இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக இப்படியான ஆடுகளங்களில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் விளையாடாதது தவறான ஒரு முடிவாகும். அவர் நன்றாகப் பந்தை ஸ்வீப் செய்வார். மேலும் இன்சைடு அவுட் ஷாட் நன்றாக விளையாடுவார். ஸ்பின்னுக்கு எதிராக அவரது ஒட்டுமொத்த ஆட்டமும் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : கம்பீர் இருப்பாரா இல்ல ரோகித் விராட் இருப்பாங்களா?.. இது நடந்ததும் தெரிஞ்சிடும் – பாக் பசித் அலி பேச்சு

மேலும் குறிப்பாக ஒரு நாள் போட்டியில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் தேவை. சுழலுக்கு எதிராக இந்தியாவில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் கூட அவர்கள் அனைவருமே சூரியகுமார் யாதவ் அளவுக்கு சிறந்தவர்கள் கிடையாது. எனவே அவரை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யாதது தவறு என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.