இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடித்துக் கொள்ள இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கேட்டுக் கொண்டதை இந்திய அணி நிராகரித்தது. இதற்கு இங்கிலாந்து தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது குறித்து முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் எப்பொழுதும் அமைதியான முறையில் பேசும் சுபாவம் கொண்டவர். ஆனால் இந்த முறை கொஞ்சம் காட்டமாக இங்கிலாந்து தரப்புக்கு பதில் அளித்து இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.
சரியான மனநிலை ஏன் இல்லை?
இதுகுறித்து பேசி உள்ள சச்சின் டெண்டுல்கர் கூறும்பொழுது “வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா சதம் அடித்தது குறித்து சரியான மனநிலையில் ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? அவர்கள் டிராவிற்காக முதலில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து அவர்கள் மிகக் கடுமையான முறையில் போராடினார்கள். மேலும் பேட்டிங் மூலம் அற்புதமான பேச்சு வார்த்தையை நடத்தினார்கள்”
“இந்த தொடர் மிகவும் போராட்டம் மிகுந்ததாக உயிரோட்டமாக இருந்தது. எப்படி இருக்கும் பொழுது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களையும் ஃபீல்டர்களையும் நாங்கள் ஏன் ஓய்வில் விட வேண்டும்? இறுதியில் ஸ்டோக்ஸ் புரூக்கை வைத்து பந்து வீச நினைத்தால் கேப்டனாக அது அவருடைய விருப்பம். இந்தியாவின் பிரச்சனை கிடையாது. எனக்கு அதைப் பற்றி எந்த வித கவலையும் கிடையாது”
முன்பே ஏன் இதைச் செய்யவில்லை?
“எங்கள் வீரர்கள் முதலில் சதம் அடிப்பதற்காக வரவில்லை டிரா செய்வதற்காகவே வந்தார்கள். அவர்கள் வந்த போதே ஆட்டம் இழந்து இருந்தால் நாங்கள் தோல்வி அடைந்திருப்போம். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் புரூக் ஏன் பந்து வீசவில்லை? அப்படியானால் நாங்கள் ஏன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை புத்துணர்ச்சியாக ஐந்தாவது டெஸ்ட்டுக்கு அனுமதிக்க வேண்டும்? இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா இல்லையா?”
இதையும் படிங்க : கம்பீர் என்னை தொடர் நாயகனாக செலக்ட் பண்ணது தப்பு.. அவர பண்ணி இருக்கணும் – புரூக் கருத்து
“இந்திய அணி முன்கூட்டியே டிராவை ஏற்றுக்கொள்ளாததை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன். இந்த முடிவை கம்பீர், கில், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா யார் எடுத்திருந்தாலும் நான் அதை ஆதரிக்கிறேன். இதே வாஷிங்டன் சுந்தர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கடைசியில் வேகமாக அடித்து விளையாடினார். நான்காவது டெஸ்ட் போட்டியில் டிராவிற்காக விளையாடினார். எதைச் செய்ய வேண்டுமோ அதை நம்முடைய வீரர்கள் சரியாக செய்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.






