இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1992 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த நிலையில் பிப்ரவரி ஆறாம் தேதி வியாழன் அன்று ராஷ்டிரி பவனில் பேசிய சச்சின் கிரிக்கெட்டில் தான் நினைவு கூற விரும்பும் தருணம் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பும் தருணம்
உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டுக்கு என்று தனி அடையாளத்தை பதித்தவர் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இவர் குவித்திருக்கும் ரன்கள் இதுவரை எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் எட்ட முடியாத ஒரு மகத்தான சாதனையாகும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டின் கடவுளாக விளங்கிக் கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் 1992 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான உலகக் கோப்பைகளில் விளையாடியவர்.
1996 இல் அரை இறுதிப் போட்டியையும், 2003ம் ஆண்டு இரண்டாம் இடத்திலும் பிடித்த இந்திய அணிகளில் ஒருவராக இருந்திருக்கிறார். இருப்பினும் அவரது பல நாள் கனவான உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற தருணம் 2011ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் நடந்தது. இந்த நிலையில் அது குறித்து பேசிய சச்சின் அந்தத் தருணத்தில் மட்டும் இன்னொரு முறை வாழ வேண்டும் என்று நினைப்பதாக சில உணர்ச்சிகரமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒருபோதும் முயற்சியை கைவிட்டதில்லை
இது குறித்து சச்சின் கூறும் பொழுது ” 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை என்பது நான் மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பும் உணர்ச்சிகரமான நினைவுகளில் ஒன்றாகும். 1983 ஆம் ஆண்டு தொடங்கிய பயணத்தில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன் தோல்வி அடைந்தேன் ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, நான் தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டிருந்தேன். அதுவே எனது வாழ்க்கையில் சிறந்த தருணங்களாக இருக்கிறது.
இதையும் படிங்க:உண்மைய சொன்னா எனக்கு டீம்ல இடமே இல்ல.. நேத்து படம் பாக்கும்போது ரோகித் கால் பண்ணார் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
என் குழந்தை பருவ பயிற்சியாளரான அர்ச்சேராகர் சார் என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பங்கை கொண்டிருக்கிறார். கோடை விடுமுறை நாட்களில் பேட்டிங் செய்வதற்கு என்னை ஐந்து வெவ்வேறு பயிற்சி வலைகளுக்கு அழைத்துச் செல்வார். என்னை மனதளவில் வலிமையாக்கும் குறுக்கு வலிகளை ஒருபோதும் எடுக்காமல் பார்த்துக் கொள்வார்” என்று சச்சின் டெண்டுல்கர் உணர்ச்சிகரமாக சில கருத்துக்களை பேசி இருக்கிறார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கரை மும்பை வான்கடே மைதானத்தை சுற்றி இந்திய வீரர்கள் தோளில் சுமந்தது நினைவிருக்கலாம்.






