வெறும் 35 பந்தில் சதத்தை.. பையன் அடிக்க முக்கிய காரணம்.. இந்த 4 விஷயங்கள்தான் – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

0
558
Sachin

நேற்று ஐபிஎல் தொடரில் 14 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ் சூரியவன்சி 35 பந்தில் அதிரடி சதம் அடித்தார். இந்த நிலையில் அவரை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் முக்கிய விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் 16 வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரை விட முன்பாக 14 வயதில் பெரிய தொடரான ஐபிஎல் தொடருக்கு வந்து சூரியவன்சி தன்னுடைய மூன்றாவது ஐபிஎல் போட்டியில் அது 35 பந்தில் அதிவேக சதம் அடித்து மிரட்டி இருக்கிறார்.

- Advertisement -

பிரச்சனையில் ஆரம்பித்த சூரியவன்சி

வைபவ் சூரிய வம்சி பீகார் மாநில கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். இவர் முதன் முதலில் பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகும் பொழுது பீகார் கிரிக்கெட் சங்கம் இரண்டாகப் உடைந்து இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு பீகார் அணிகள் அனுப்பப்பட்ட மோசமான சம்பவம் நடைபெற்றது.

அந்த நேரத்தில் தான் வைபவ் சூரியவன்சி பீகார் மாநில அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அவருடைய ஐபிஎல் அறிமுகம் முதல் பந்திலேயே சிக்ஸர் என மிகச் சிறப்பாக ஆரம்பித்தது. அடுத்து இரண்டாவது போட்டியிலும் அதிரடியாகவே தொடங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியில் 14 வயதில் 35 பந்தில் சதம் அடித்தது பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

முதல் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 16வது வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், அப்போது 14வது வயதில் அதிரடி சதம் அடித்திருக்கும் வைபவ் சூர்யவன்சியின் பேட்டிங் சிறப்பம்சங்கள் குறித்து மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். சிறுவனாக இருந்த பொழுதும் அவருடைய பேட்டிங்கில் குறிப்பிடும்படியாக நான்கு விஷயங்கள் இருப்பதை சச்சின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க : எனக்கு எந்த பவுலரையும் பார்த்து பயம் கிடையாது.. அந்த ஒரு விஷயம் தான் முக்கியம் – 14 வயது சூரியவன்சி பேட்டி

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்க்கையில் “வைபவ் சூரியவன்சியின் அச்சமற்ற அணுகுமுறை, அவருடைய பேட் வேகம், பந்தின் லென்த்தை முன்கூட்டியே கணிப்பது மற்றும் பந்தை அடிப்பதற்கு உருவாக்கும் ஆற்றல் என இந்த நான்கு விஷயங்களும் அவருடைய அற்புதமான இன்னிங்ஸ்க்கு பின்னால் இருக்கும் செய்முறையாகும். அவர் மிகச் சிறப்பாக விளையாடினார்” என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -