இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட்டை இந்திய லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.
தற்போது இரு அணிகளுக்கும் இடையே சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்து வருகிறது. இப்படியான ஒரு ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஏழு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நான்கு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன. இங்கு முதல் மூன்று இன்னிங்ஸ்கள் பெரிய அளவில் ஸ்கோர் வரக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த முறை பச்சை விக்கெட் கொடுத்து பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை ஆஸ்திரேலியா ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினாலும், தங்களுடைய பௌலிங் யூனிட் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினாலும், ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் இப்படியான ஒரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த முடிவு அவர்களுக்கு எதிராகவும் இந்த ஆடுகளத்தில் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழந்ததும் உள்ளே வந்த ரிஷப் பண்ட் சிறந்த பந்துவீச்சில் இருந்த ஸ்காட் போலண்டின் முதல் பந்தில் இறங்கி வந்து தலைக்கு நேராக சிக்சர் அடித்தார். தொடர்ந்த அவரது அதிரடியில் 29 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். சிறப்பாக விளையாடிய அவர் 33 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்து,
பெரிய தாக்கத்தை கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : கம்பீருக்கு பிரசித் கிருஷ்ணா பற்றி அது தெரியும்.. ஆனா ராணாவ ஆட வச்சது எதுக்காக? – இந்திய முன்னாள் வீரர் கேள்வி
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள ட்வீட்டில் “பெரும்பாலான பேட்டர்கள் 50 அல்லது அதற்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய இந்த ஆடுகளத்தில், ரிஷப் பண்ட் 184 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அவர் சந்தித்த முதல் பந்தில் இருந்து ஆஸ்திரேலியா அணியை திணறடித்தார். அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு எப்பொழுதும் வேடிக்கையாக சுவாரசியமாக இருக்கிறது. என்ன மாதிரியான ஒரு இம்பாக்ட் இன்னிங்ஸ்” என்று பாராட்டி இருக்கிறார்.