கம்பீருக்கு பிரசித் கிருஷ்ணா பற்றி அது தெரியும்.. ஆனா ராணாவ ஆட வச்சது எதுக்காக? – இந்திய முன்னாள் வீரர் கேள்வி

0
516
Krishna

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பும்ரா இல்லாத நிலையில் சிறப்பாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவை ஏற்கனவே விளையாட வைத்திருக்க வேண்டும் என இந்தியா மற்றும் கர்நாடக மாநில வீரர் டோட்டா கணேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணியில் ஆஸ்திரேலியா எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க பட வேண்டும் என்றும் அதற்கான காரணம் குறித்தும் டோட்டா கணேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய ஏ அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்

நடப்பு டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய ஏ அணியில் பிரசித் கிருஷ்ணா இரண்டு போட்டிகளிலும் விளையாடினார். மேலும் இரண்டு போட்டிகளிலும் அவரது பந்து வீச்சு நல்ல முறையில் இருந்தது.

இப்படியான நிலையில் கவுதம் கம்பீர் முதல் டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஹர்ஷித் ராணாவை விளையாட வைத்தார். மேலும் அதற்கடுத்து ஆகாஷ் தீப்பை விளையாட வைத்தார். அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் கடைசியாக பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹர்ஷித் ராணாவுக்கு எதற்கு வாய்ப்பு?

இன்றைய போட்டியில் பும்ரா காயம் அடைந்து பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு பெரிய பொறுப்பு இருந்தது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் 15 ஓவர்கள் பந்துவீசி 3 மெய்டன்கள் செய்து 42 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : ஒருநாளில் 15 விக்கெட்.. கபில் தேவ் சாதனையை உடைத்த ரிஷப் பண்ட்.. இந்திய அணி வெல்லுமா? – 5வது சிட்னி டெஸ்ட்

இது குறித்து டோட்டா கணேஷ் கூறும் பொழுது ” நடந்து கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய ஏ அணியில் இடம் பெற்ற பிரசித் கிருஷ்ணா என்ன செய்தார்? என்று பார்த்த பிறகு, ஹர்ஷித் ராணாவை தேர்ந்தெடுத்தது எந்த அர்த்தமும் இல்லாத ஒரு செயல். பிரசித் கிருஷ்ணா நல்ல ரிதத்தில் இருந்தார். மேலும் அவரைத் தேர்வு செய்யாமல் இந்தியா ஒரு தந்திரத்தை தவறவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -