சச்சின் இப்படி பண்ண மாட்டாரே.. பாகிஸ்தான் தோல்விக்கு பின் அவர் வெளியிட்ட பதிவு.. ரசிகர்கள் ஆச்சரியம்

0
3342

இந்திய அணி டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றதை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவரது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. 2007ம் ஆண்டு முதல் தற்போது வரை டி20 உலக கோப்பையை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டை தவிர அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டு மட்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இது டி20 உலக கோப்பைக்கு மட்டுமல்ல, ஒரு நாள் உலகக் கோப்பைக்கும் பொருந்தும். இப்படியான சிறப்பான வரலாறுகளை இந்திய அணி பெற்றிருக்கும் வேளையில், நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு அருமையான வாய்ப்பாக இருந்தது.

ஆனாலும் இந்திய அணி நிர்ணயித்த 119 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 113 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி பெற்ற திரில் பெட்டியை இந்திய முன்னாள் வீரர்கள் வளரும் பாராட்டி வரும் வேளையில், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் வலைதளத்தில் கவனிக்கத்தக்க பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் அதே வேளையில் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி புதிய கண்டத்தில் நடைபெற்றாலும் முடிவு என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது. (சிரிக்கும் ஸ்மைலியுடன்) நியூயார்க்கில் நமது பந்துவீச்சாளர்கள் நம் கண்களுக்கு ஆப்பிள் விருந்தாக காட்சியளித்தார்கள். என்ன ஒரு த்ரில்லான போட்டி! அமெரிக்காவில் சிறந்த சூழ்நிலையில் அற்புதமான கண்காட்சியில் இந்தியா மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் டீமே வேண்டாம் மொத்தமா களைச்சிடுங்க.. நம்மள எதுவுமே பண்ண மாட்டாங்கனு நினைச்சிட்டு இருக்காங்க.. விளாசும் வாசிம் அக்ரம்

இந்த பதிவில் புதிய கண்டத்திலும் அதே முடிவு என்று சச்சின் சிரிக்கும் எமோஜியை வைத்து வெளியிட்டு இருக்கிறார். இது கிண்டல் அடிக்கும் வகையிலேயே தற்போது ரசிகர்களால் கருதப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர் இது மாதிரியான பதிவுகளை வெளியிடுவது மிகவும் அரிதான விஷயமாகும். ஆனால் சச்சின் ரசிகர்களும், இந்திய அணி ரசிகர்களும் இதற்கு இது கிண்டல் அடிக்கும் பதிவு இல்லை எனவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவே அவர் அவ்வாறு வெளியிட்டு இருக்கிறார் எனவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.