பாகிஸ்தான் டீமே வேண்டாம் மொத்தமா களைச்சிடுங்க.. நம்மள எதுவுமே பண்ண மாட்டாங்கனு நினைச்சிட்டு இருக்காங்க.. விளாசும் வாசிம் அக்ரம்

0
3845

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு பாராட்டுக்கள் அனைவரும் தெரிவித்து வரும் வேளையில், பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அணியை மொத்தமாக களைத்து விட வேண்டும் என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் நடந்த தோல்விக்கு பிறகு, வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் உணர்ந்து செயல்பட்டது போல பேட்டிங்கில் அனைவரும் செயல்படுத்த தவறி விட்டனர். முதலில் விளையாடிய இந்திய அணி இந்திய பேட்ஸ்மேன்களில் ரிஷப் பண்ட்டைத் தவிர அனைவரும் விரைவிலேயே ஆட்டமிழக்க 119 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

இதில் ரிஷப் பண்ட் மற்றும் சிறப்பாக விளையாடி 42 ரன்கள் குவித்தார். இதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 120 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதால் பந்துக்கு பந்து ஒரு ரன் அடித்தால் கூட வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சினாலும், பாகிஸ்தானின் மோசமான பேட்டிங்கால் 113 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இந்த சூழ்நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி சந்தித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பயிற்சியாளர் குழுவை தவிர பாகிஸ்தான் அணியை மொத்தமாக களைத்து விட வேண்டும் என்று ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“பாகிஸ்தான் வீரர்கள் 10 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருவதால் நான் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ரிஸ்வானுக்கு போட்டி பற்றிய விழிப்புணர்வு சுத்தமாக இல்லை. பும்ராவின் கையில் பந்தை ரோகித் கொடுக்கும் பொழுதே விக்கெட் விழுவதற்கான அபாயம் இருக்கிறது என்று அவருக்கு நன்கு தெரியும்.

- Advertisement -

இருப்பினும் தேவையில்லாமல் அவரது விக்கெட்டை தாரை வார்த்தார். இப்திகார் அகமது நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனால் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. அதேபோல பகார் ஜமானுக்கும் போட்டியை பற்றிய விழிப்புணர்வு இல்லை. போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அந்த தவறு பயிற்சியாளர்களை சேருமே தவிர வீரர்களை பாதிக்காது என்று பாகிஸ்தான் வீரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:சூப்பர் 8 சுற்று.. இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் அணி.. தகுதி பெற என்ன செய்ய வேண்டும்.?

எனவே பயிற்சியாளரை மட்டும் வைத்துவிட்டு அணியை மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். பாகிஸ்தான் அணியில் இரண்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் கூட பேசிக் கொள்வதே இல்லை. இது போன்ற வீரர்களை அணியில் சேர்க்காமல் வீட்டிலேயே உட்கார வைக்கப்பட வேண்டும். நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடி வருகிறீர்கள் என்பதை கொஞ்சமாவது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.