நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த அணி இதுதான் – சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ள அணி விபரம்

0
218

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த உடன் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அல்லது கிரிக்கெட் வீரர்கள் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்வது வழக்கம். முதல் போட்டியில் இருந்து இறுதிப் போட்டி வரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியாக அவர்கள் கூறுவார்கள். தற்பொழுது சச்சின் டெண்டுல்கர் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஐபிஎல் டீமை தேர்வு செய்து இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ள சிறந்த ஐபிஎல் அணி :

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் வீரர் பட்லர் அதிகபட்சமாக 863 ரன்கள் குவித்தார். அவரை தனது அணியில் ஓபனிங் வீரராக டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார். அவருடன் இணைந்து மற்றொரு பேட்ஸ்மேனாக ஷிகர் தவன் விளையாடுவது சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மிடில் ஆர்டர் வரிசையில் கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார். நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் 600 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல குஜராத் பணியை சிறப்பாக வழி நடத்திய ஹர்திக் பாண்டியா 487 ரன்களும் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தியிருந்தார். டேவிட் மில்லர் எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத அளவிற்கு இந்த ஐபிஎல் தொடரில் 481 ரன்கள் குவித்தார் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 68.61. இந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்றும் சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பினிஷிங் வீரர்களாக லியம் லிவிங்ஸ்டன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்திருக்கிறார். நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் லியம் லிவிங்ஸ்டன் 117 மீட்டர் தூர சிக்ஸர் அடித்தது நமக்கு தெரியும். அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் இவரும் இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் விளையாடுவது சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா முதல் இடத்தை பெற்றிருக்கிறார். அவருக்கு துணையாக முகமது ஷமி அணியில் இடம் பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரை தொடர்ந்து இரண்டு ஸ்பின் பந்து வீச்சாளர்கள் சஹால் மற்றும் ரஷித் கான் ஆகியோரை சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த அணி :

- Advertisement -

ஜோஸ் பட்லர், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், லியம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக், ரஷித் கான், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சஹால்.