விராட் கோலி ஓய்வு.. மனம் உருகி சச்சின் நெகிழ்ச்சி.. இளம் தலைமுறைக்கு வழிக்காட்டி என பாராட்டு

0
55

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிட் சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பிறகு பத்தாயிரம் ரன் கிளப்பில் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் 770 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,  திடீரென்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இனி விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடப் போகிறார். சச்சின் டெண்டுல்கரை போல் டெஸ்ட், ஒரு நாள் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பட்டையை கிளப்பியவர் விராட் கோலி.இதனால் சச்சின் ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலிக்கு அவருடைய இடம் பேட்டிங் வரிசையில் கிடைத்தது.

- Advertisement -

கோலி அளித்த பரிசு:

இந்த தருணத்தில் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர் மனம் உருகி ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள இந்த தருணத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது விராட் கோலி எனக்கு அளித்த ஒரு பரிசு தான் நினைவுக்கு வருகிறது.

அது தனிப்பட்ட முறையில் என் நெஞ்சில் இடம் பெற்றிருக்கக் கூடிய பரிசு. விராட் கோலியின் தந்தை காலமான நிலையில் அவர் கையில் கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு கோலி பரிசாக தந்தார். அவருடைய இந்த பரிசை என்னால் மறக்கவே முடியாது. அதை நான் பத்திரமாக இன்றும் வைத்துக் கொண்டிருக்கின்றேன்.தற்போது விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் மீண்டும் அவருக்கு பரிசை அளிக்க என்னிடம் எந்த ஒரு கயிறும் இல்லை.

- Advertisement -

இளம் தலைமுறைக்கு ரோல் மாடல்:

ஆனால் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு வீரராக விராட் கோலி எப்போதுமே இருப்பார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒட்டுமொத்த இளம் தலைமுறையினரை கிரிக்கெட் பக்கம் வரவைத்த முக்கிய பங்கு விராட் கோலிக்கு சேரும். அதுதான் விராட் கோலியின் மகிமை ஆகும்.விராட் கோலி டெஸ்ட் வாழ்க்கை மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது.

இதையும் படிங்க: கோலி டெஸ்ட் கிரிக்கெட் ஒய்வில் புதிய திருப்பம்.. நடந்த விஷயமே வேற.. பிசிசிஐ காட்டிய அதிரடி – வெளியான தகவல்கள்

அவர் வெறும் ரன்களை மட்டும் அடிக்காமல், அதற்கு மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு பலவற்றை செய்திருக்கின்றார். தற்போது இனம் தலைமுறையினர் டெஸ்ட் கிரிக்கெட்டையும் திரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதற்கு விராட் கோலியின் பங்கு தான் மிகவும் காரணம். விராட் கோலியின் இந்த ஸ்பெஷலான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

- Advertisement -