கிரிக்கெட்டை நிறுத்திய பிறகுதான்.. இந்த ஒரு விஷயம் எனக்கு நல்லா புரிஞ்சுது.. இந்திய வீரர்களுக்கு சச்சின் அறிவுரை

0
289

இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவான் ஆன சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது நேற்று வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் பங்கு பெற்ற சச்சின் டெண்டுல்கர் தற்போதைய கிரிக்கெட் வீரர்களுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். எ இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தற்போதைய கிரிக்கெட் வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் பேசும்போது “கிரிக்கெட் இல்லாமல் நாம் அனைவரும் இந்த அறையில் உட்கார மாட்டோம் என்று கூறுவேன். என்னை பொருத்தவரை இது எனக்கு கிடைத்த இறுதியான வாழ்நாள் பரிசு. எங்களிடம் பேட் மற்றும் பந்து இருக்கிறது. அதன் மீது உறுதியான பிடிப்பு இல்லை என்றால் அல்லது நீங்கள் பேட் மற்றும் பந்தின் மீதான பிடியை இழக்கத் தொடங்கினால் உங்கள் வாழ்க்கையிலும் மெதுவாக நீங்கள் பிடியை இழக்கத் தொடங்குவீர்கள்.

- Advertisement -

கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் அறிவுரை

நான் உங்களுக்கு அறிவுரை கூறி கவனம் செலுத்துங்கள் என்று சொல்லக்கூடாது. ஆனால் கவனச் சிதறல்கள் இருக்கும். அது உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்க விடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள அனைத்தையும் மதிப்பிட்டு விளையாட்டை கவனித்துக் கொள்ளுங்கள். நம்மிடம் எதுவும் இல்லை. நம்மிடம் எல்லாம் இருக்கும்போது அதை மதித்து முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாட்டின் பெயரை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் பொருத்தமான முறையில் நடந்து கொள்வது முக்கியம்.

இதையும் படிங்க:வெறும் 37 பந்து 100 ரன்.. ரோகித்துக்குப் அடுத்து.. டி20யில் அபிஷேக் ஷர்மா படைத்த அபார சாதனைகள்.. முழு விவரம்

நான் சொன்ன மாதிரி நீங்கள் அனைவரும் இப்போதைய கிரிக்கெட் வீரர்கள். எனவே உங்களுக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. எனவே வெளியே சென்று உங்களால் முடிந்த சிறந்ததை கொடுங்கள் கிடைத்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட நிறுத்திய பிறகு தான் சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று உணர்வீர்கள். எனவே உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி முடித்திருக்கிறார். மேலும் இதில் கலந்து கொண்ட இந்திய வீரர்களுக்கும் பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -