வெறும் 37 பந்து 100 ரன்.. ரோகித்துக்குப் அடுத்து.. டி20யில் அபிஷேக் ஷர்மா படைத்த அபார சாதனைகள்.. முழு விவரம்

0
519

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.

இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்து சிறப்பான சாதனைகளை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து ஐந்தாவது டி20

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

1.5 ஓவர்களில் இந்திய அணி 21 ரன்கள் இருந்தபோது சஞ்சு சாம்சன் 16 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மறுமுனையில் அபிஷேக் சர்மா தனது அபார பேட்டிங் மூலம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 95 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக பவர் பிளேவில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதே அதிரடியை தொடர்ந்த அபிஷேக் சர்மா 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா படைத்த அபார சாதனை

டி20 கிரிக்கெட்டில் 12 பந்துகளில் யுவராஜ் சிங் தனது அதிவேக அரை சதத்தை பதிவு செய்த நிலையில் அவருக்கு அடுத்ததாக அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் பதிவு செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு அபிஷேக் ஷர்மா தொடர்ந்து பௌண்டரியும், சிக்ஸர்களும் ஆக விளாச, திலக் வர்மா மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி 43 பந்துகளில் 115 ரன்கள் குவித்தது. 8.6 ஓவர்களில் இந்திய அணி 136 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது தனது இரண்டாவது விக்கெட்டை பறி கொடுத்தது.

இதையும் படிங்க:யார் என்ன சொன்னாலும்.. விராட் ரோஹித் இதுல ஸ்பெஷலிஸ்ட்.. எனக்கு நம்பிக்கை இருக்கு – கங்குலி ஆதரவு

15 பந்துகளில் 24 ரன்கள் குவித்து திலக் வர்மா ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளை எதிர்கொண்டு தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். டி20 கிரிக்கெட்டில் இது இரண்டாவது அதிவேக சதமாக அமைந்தது. 35 பந்துகளில் ஏற்கனவே ரோகித் சர்மா சதம் அடித்த நிலையில் அவருக்கு அடுத்ததாக அபிஷேக் சர்மா 37 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 41 பந்துகளை எதிர்கொண்டு விளையாடி வரும் அபிஷேக் ஷர்மா இதுவரை 5 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -