தோல்விய ஜீரணிக்கவே முடியல.. இந்த 3 தப்புல எதை செஞ்சிங்க? சுய பரிசோதனை வேணும் – சச்சின் வருத்தம்

0
384
Sachin

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒயிட் வாஸ் ஆகி மோசமான சாதனை படைத்ததை சச்சின் டெண்டுல்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் ஏற்கனவே முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் அடைந்திருந்ததால் ஒட்டுமொத்தமாக இந்த தொடரை இந்திய அணி இழந்தது.

- Advertisement -

92 வருட கிரிக்கெட் பயணத்தில் மோசமான வரலாறு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 92 வருட பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் முழுமையாக தோல்வி அடைந்தது கிடையாது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் மூன்று போட்டிகளை தொடர்ந்து தோற்று இருக்கிறது. ஆனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றையும் தொடர்ந்து தோற்றது கிடையாது.

இந்த நிலையில் இலங்கை அணி இடம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்து இந்தியா வந்த நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அதைவிட மோசமாக விளையாடி மூன்று போட்டிகளையும் தோற்று 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மோசமான வரலாற்றை எழுதியிருக்கிறது.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் வருத்தம்

இப்படியான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் இந்த வரலாற்று படுதோல்வி குறித்து மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த தோல்வியை தன்னால் விழுங்குவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் 72 ரன்.. 5 ஓவரில் பாகிஸ்தான் அணியை வென்று இலங்கை சாம்பியன்.. ஹாங்காங் சிக்ஸஸ் 2024

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது “இந்திய அணி சொந்த மண்ணில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்திருப்பது விழுங்குவதற்கு மிகவும் கடினமான மாத்திரை ஆகும்.மேலும் இந்த தோல்வி நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள அழைக்கிறது. நாம் தோல்வி அடைந்ததற்கான காரணம் தயாரிப்பு இன்மையா? மோசமான ஷாட் தேர்வா? அல்லது சரியான மேட்ச் பயிற்சி இல்லாததா? கில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தார் மேலும் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -