நேற்று பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், இந்திய கிரிக்கெட்டில் வினோத வீரராக பார்க்கப்படும் அமோல் மசூம்தார் யார்?
இந்திய பெண்கள் அணி நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரை வென்றது.
இந்திய அணி செலுத்திய மரியாதை
இந்திய பெண்கள் அணியின் இந்த வெற்றிக்கு இந்திய உள்நாட்டு கிரிக்கெட் முன்னாள் வீரர் மசூம்தார் பங்களிப்பு பெரிய அளவில் இருப்பதாக பேசப்படுகிறது. களத்திற்கு வெளியே மிகவும் அமைதியாகவும் அதே சமயத்தில் சூழ்நிலைக்கு தகுந்த முடிவுகளை எடுத்தும் எல்லோரையும் அமோல் மசூம்தார் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று உலகக்கோப்பை வென்றதும் இந்திய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் தலைமை பயிற்சியாளர் அமோல் மசூம்தார் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த அளவிற்கு இந்திய கேப்டனை மரியாதை செலுத்தியதால் யார் இவர்? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.
யார் இந்த பயிற்சியாளர்?
இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு 1994 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் அமுல் மசூம்தார் விளையாடியிருக்கிறார். இதில் அவர் 48 ரன் ஆவரேஜில், 11,167 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இதில் 30 சதங்கள் மற்றும் 60 அரை சதங்கள் அடக்கமாகும்.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இவ்வளவு சிறப்பாக விளையாடி அதுவும் மும்பை வீரராக இருந்தும் இவருக்கு இந்திய அணியில் ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்திய அணிக்கு திறமையான வீரர்கள் தேவையாக இருந்த போதும் கூட இவரை தேர்வுக்குழு திரும்பிப் பார்க்கவில்லை.
இதையும் படிங்க : உகோ வரலாற்றில் இந்தியர்கள் செய்யாத சாதனை.. ஜாகீர் கானை தாண்டி வரலாற்று ரெக்கார்டு படைத்த தீப்தி சர்மா
இப்பொழுதும் இந்திய அணிக்கு இவ்வளவு பெரிய வீரர் அறிமுகமாகாமல் போனது ஏன்? என யாருக்குமே தெரியாது. இந்த வகையில் இவர் இந்திய கிரிக்கெட்டின் மிக வினோதமான வீரராக கருதப்படுகிறார். ஆனால் தற்போது பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்து பலருக்கு கிடைக்காத உலகக்கோப்பை வெற்றியை சாதித்திருக்கிறார். கிரிக்கெட் இவருக்கு தாமதமாக கொடுத்தாலும் பெரியதை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.






